இதுதான் புதிய Motorola போன்.. OLED டிஸ்பிளே.. 16ஜிபி ரேம்.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா. அதாவது மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா (Motorola Edge 70 Ultra) எனும் ஸ்மார்ட்போனை தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்த போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ட்ரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும். மேலும் டெக்ஸ்ச்சர்டு பேனலில் மேட் ஃபினிஷ் மற்றும் வீகன் லெதர் டிசைன் கொண்டுள்ளது இந்த புதிய போன். குறிப்பாக இது ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும்.

மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Edge 70 Ultra Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் (flat OLED) இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான யுஎக்ஸ் ஓஎஸ் மூலம் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இயங்கும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா போனில் உள்ளது.
6000mAh பேட்டரி முதல் 7000mAh பேட்டரி வரை இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் அறிமுகமாகும். அதேபோல் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் தான் வெளிவரும். குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications