Home
Mobile

வாடா செல்லம்.. இந்தியாவே வெயிட்டிங்.. புதிய Motorola போன் ரெடி.. ஒஎல்இடி டிஸ்பிளே.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா (Motorola Edge 70 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா போனின் சிப்செட் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா அம்சங்கள்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

வாடா செல்லம்.. இந்தியாவே வெயிட்டிங்.. புதிய Motorola போன் ரெடி..

1.5K ரெசல்யூஷன் (1.5K resolution)கொண்ட ஒஎல்இடி டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 512ஜிபி வரை மெமரி, 16ஜிபி வரை ரேம் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி57 பவர் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி57 பவர் அம்சங்கள் (Moto G57 Power Specifications): ஆக்டா கோர்ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Snapdragon 6s Gen 4 SoC) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

அதுவும் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080 பிக்சல்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் இந்த புதிய மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதேபோல் மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி சோனி எல்ஒடி-600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + ஃபிளிக்கர் சென்சார் (Flicker Sensor) ஆகிய கேமரா கேமராக்கள் உள்ளன. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டூயல் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

தூசி மற்றும் ஸ்பிளாஸ் (dust and splash) எதிர்ப்பிற்காக ஐபி64 ரேட்டிங்கை (IP64 Rating) கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

வாடா செல்லம்.. இந்தியாவே வெயிட்டிங்.. புதிய Motorola போன் ரெடி..

மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

குறிப்பாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6.802.11ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-ச் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போனில் உள்ளன. பான்டோன் ரெகாட்டா, பான்டோன் கோர்செயர், PANTONE Fluidity நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். இந்த போன் நாளை பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. வங்கி சலுகைகளுடன் சேர்த்து ரூ.12,999 விலையில் இந்த போனை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Ultra chipset and key specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X