ஸ்லிம் போன்களின் புது ராஜா.. 5.99 மிமீ புது Motorola போன்.. டிச.15 அறிமுகம்.. பாதிக்கு பாதி விலை.. எந்த மாடல்?
வெறும் 5.99 மிமீ என்கிற அளவிலான "சூப்பர் ஸ்லிம் டிசைனில்" ஒரு புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் (வெளியீட்டு தேதி லீக் ஆகியுள்ளது) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. என்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
என்ன மாடல்? அது மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) ஸ்மார்ட்போன் ஆகும். இது கடந்த நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சில முக்கிய வேறுபாடுகளுடன் இதே ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்கு வரவுள்ளது. அந்த முக்கிய வேறுபாடுகள் - பெரிய பேட்டரி மற்றும் புதிய வடிவமைப்பாக இருக்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? டிப்ஸ்டர் முகுல் சர்மா (@stufflistings) வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இது சீனாவிற்கு மட்டுமேயான மோட்டோ எக்ஸ் 70 ஏர் மாடலை போலவே 5.99 மிமீ ஸ்லிம் டிசைனை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில் - மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும் அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போன்கள் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ் மற்றும் ஆப்பிள் ஐபோன் ஏர் ஆகிய 2 மாடல்களுக்கும் எதிராக போட்டியிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? வெளியீட்டு தேதியை லீக் செய்த டிப்ஸ்டர் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்களை வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா போன்றவைகளை கொண்டிருக்கலாம் என்கிறார். அதாவது மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட்டில் இருப்பதை போலவே!
கடந்த மாதம் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 70 (க்ளோபல் வேரியண்ட்) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ சிம் + இசிம்) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (ஜூன் 2031 வரை செக்யூரிட்டி அப்டேட்கள்)
- 6.67-இன்ச் pOLED சூப்பர் HD டிஸ்பிளே
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 446ppi பிக்சல் டென்சிட்டி
- HDR10+ ஆதரவு
- 300Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட்
- 4,500 nits வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்
- 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ்
- OIS உடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா (f/1.8)
- பிரத்யேக 3-இன்-1 லைட் சென்சார் கொண்ட 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (f/2.0)
- 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 68W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 4,800mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி
- 5ஜி, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், எல்டிஇபிபி, கலிலியோ, என்எஃப்சி, யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் வைஃபை 6இ
- டால்பி அட்மாஸிற்கான ஆதரவுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஃபேஸ் அன்லாக்
- மோட்டோரோலாவின் திங்க்ஷீல்ட் ப்ரொடெக்ஷன்
- MIL-STD-810H ஆயுள் சான்றிதழுடன் விமான-தர அலுமினிய கட்டமைப்பு
- IP68 + IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங்
- அளவீட்டில் 159×74×5.99மிமீ
- எடையில் 159 கிராம்
என்ன விலைக்கு வரும்? மோட்டோரோலா எட்ஜ் 70 அதன் க்ளோபல் வேரியண்ட்டை விட கணிசமாக குறைந்த விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் ஆனது இங்கிலாந்தில், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.80,000 க்கும், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் சுமார் ரூ.81,000 க்கும் என்கிற தொடக்க விலையில் கிடைக்கிறது. ஆனால் டிப்ஸ்டரின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.35,000 க்கும் (கிட்டத்தட்ட பாதி விலை) குறைவாக விற்கப்படும்.


Click it and Unblock the Notifications








