இந்த மெல்லிய Motorola போனுக்கு தான் தவம் கிடந்தோம்! இப்ப டீசர் வேற வந்துடுச்சு! 50MP கேமரா.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வகையில் இந்நிறுவனம் கூடிய விலையில் இன்னொரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) ஸ்மார்ட்போன் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 70 டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விரைவில் மோட்டோரோலா எட்ஜ் 70 அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த புதிய போனுக்கு பிரத்யேக மைக்ரோசைட் நேரலையில் உள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (Motorola Edge 70 Specifications): மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த மெலிதான மோட்டோரோலா போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.
அதுவும் 6.7 இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 2712 x 1220 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன
குறிப்பாக ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் மோட்டோரோலா எட்ஜ் 70 போனில் உள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் 5.99 எம்எம் தடிமன், 159 கிராம் எடை கொண்டுள்ளது.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளன. மேலும் இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
மோட்டோரோலா எட்ஜ் 70 போனில் 5500mAh முதல் 7000mAh பேட்டரி வரை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

குறிப்பாக 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
இந்த போன் பேன்டோன் லில்லி பேட் (Pantone Lily Pad), பேன்டோன் கேஜெட் கிரே (Pantone Gadget Gray), பேன்டோன் பிராஞ்ச் கிரீன் (Pantone Bronze Green) நிறங்களில் வாங்க கிடைக்கும். இந்த போன் ரூ.35,000-க்குள் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








