என்ன இப்படி இறங்கிட்டாங்க.. 14 Swarovski படிக கற்கள் பதிக்கப்பட்ட புதிய Motorola போன்.. என்ன விலை?
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் ஒரு புதிய ஃபேஷன்-ஃபார்வர்டு (டிசைனர்) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது போல் தெரிகிறது. மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் மார்க்கெட்டுக்கு வந்த சில வாரங்களுக்கு பிறகு, அதே ஸ்மார்ட்போனின் ஸ்வரோவ்ஸ்கி எடிஷன் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.
நம்பகமான லீக்கர் இவான் பிளாஸ் (@evleaks) பகிர்ந்து கொண்ட மார்க்கெட்டிங் போஸ்டர் வழியாக - மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்வரோவ்ஸ்கி எடிஷன் (Motorola Edge 70 Swarovski Edition) விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இந்த ஸ்மார்ட்போன் - க்ளீன் ஆன பான்டோன் "கிளவுட் டான்சர்" பினிஷை பெற்றுள்ளது - இது 2026 ஆம் ஆண்டில் பான்டோனின் அதிகாரப்பூர்வ கலர் ஆக மாறும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு கிரீமி, மென்மையான வெள்ளை நிற ஷேடில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ஆனது வேகன் லெதர் கொண்டு மூடப்பட்டுள்ளது.
எல்லாவற்றை விட முக்கியமாக இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் 14 உண்மையான ஸ்வரோவ்ஸ்கி படிகங்களால் புள்ளியிடப்பட்ட வடிவத்தில் உட்பொதிக்கப்பட்டுள்ளது. ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் ஆனது அவற்றின் ஒப்பிடமுடியாத புத்திசாலித்தனம், துல்லியமான வெட்டு மற்றும் உயர் தரம் காரணமாக சிறப்பு வாய்ந்தவைகளாக கருதப்படுகின்றன. இது ஒரு ரகசியமான, காப்புரிமை பெற்ற உற்பத்தி செயல்முறையின் கீழ் வருகிறது. இது நிலையான கண்ணாடி அல்லது வேறு சில படிகங்களுடன் ஒப்பிடும்போது ஒரு சிறந்த பிரகாசத்தையும் உருவாக்குகிறது.
மேலும் மோட்டோரோலா பிராண்டிங் ஆனது "பான்டோன் கிளவுட் டான்சர்" வேலைப்பாட்டுக்குள் இருப்பதையும் பார்க்க முடிகிறது. இது வெறும் ஓவியம் மட்டுமல்ல. ரேஸர் 60 ஸ்பெஷல் எடிஷனை மற்றும் கிரிஸ்டல்-பிளேயர் இயர்பட்களின் தொகுப்பை தொடர்ந்து, இந்த ஆண்டு மோட்டோரோலாவின் இரண்டாவது ஸ்வரோவ்ஸ்கி-தீம்டு அறிமுகம் இதுவாகும்.
இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நினைவூட்டும் வண்ணம் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.80000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக ஸ்வரோவ்ஸ்கி எடிஷனின் விலை இன்னும் அதிகமாக இருக்கும்.
மேலும் அம்சங்கள் அடிப்படையிலும் எந்த மாற்றங்களும் இருக்காது - அதாவது ஸ்டாண்டர்ட் எடிஷன் மற்றும் ஸ்வரோவ்ஸ்கி எடிஷன் ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியான அம்சங்களையே கொண்டிருக்கும். இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் இல்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்
மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ சிம் + இசிம்) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (ஜூன் 2031 வரை செக்யூரிட்டி அப்டேட்கள்)
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 446ppi பிக்சல் டென்சிட்டி
- HDR10+ ஆதரவு
- 300Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட்
- 4,500 nits வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.67-இன்ச் pOLED சூப்பர் HD டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்
- 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ்
- OIS உடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா (f/1.8)
- பிரத்யேக 3-இன்-1 லைட் சென்சார் கொண்ட 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (f/2.0)
- 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 68W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 4,800mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி
- 5ஜி, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், எல்டிஇபிபி, கலிலியோ, என்எஃப்சி, யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் வைஃபை 6இ
- டால்பி அட்மாஸிற்கான ஆதரவுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஃபேஸ் அன்லாக்
- மோட்டோரோலாவின் திங்க்ஷீல்ட் ப்ரொடெக்ஷன்
- MIL-STD-810H ஆயுள் சான்றிதழுடன் விமான-தர அலுமினிய கட்டமைப்பு
- IP68 + IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங்
- அளவீட்டில் 159×74×5.99மிமீ
- எடையில் 159 கிராம்
ஐபோன் ஏர், கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-க்கு போட்டி: 5.99மிமீ ஸ்லிம் பாடியுடன் வரும் மோட்டோரோலா எட்ஜ் 70 ஆனது இந்நிறுவனத்தின் மிக மெல்லிய ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக அறிமுகமாகிறது. இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால், ஐபோன் ஏர் மற்றும் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் போன்ற விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக போட்டியிடக்கூடும். இந்தியாவில், ஐபோன் ஏர் ரூ.1,19,900 க்கும், கேலக்ஸி எஸ்25 எட்ஜ் விலை ரூ.1,09,999 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








