Home
Mobile

தம்பி விவோ கொஞ்சம் ஓரம்போ.. டிச.15-ல் வருகிறது மிரட்டலான Motorola போன்.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?

ரியல்மி, சாம்சங், விவோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 15-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மெல்லிய வடிவமைப்புடன் தரமான அம்சங்களுடன் வெளிவரும்.

இந்நிலையில் டிசம்பர் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு மோட்டோரோலா எட்ஜ் 70 போனின் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

டிச.15-ல் வருகிறது மிரட்டலான Motorola போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (Motorola Edge 70 Specifications): 5000mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த மெலிதான மோட்டோரோலா போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா போன்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.

6.7 இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 2712 x 1220 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி மோட்டோரோலா எட்ஜ் 70 போனில் உள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் 5.99 எம்எம் தடிமன், 159 கிராம் எடை கொண்டுள்ளது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

டிச.15-ல் வருகிறது மிரட்டலான Motorola போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 70 போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளன. மேலும் இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

போன் பேன்டோன் லில்லி பேட் (Pantone Lily Pad), பேன்டோன் கேஜெட் கிரே (Pantone Gadget Gray), பேன்டோன் பிராஞ்ச் கிரீன் (Pantone Bronze Green) நிறங்களில் வாங்க கிடைக்கும். இந்தியாவில் இந்த புதிய மோட்டோரோலா போன் ரூ.30,999 அல்லது ரூ.35.999 விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 specifications and price leaked ahead of its launch in India on December 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X