Home
Mobile

இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. 3D டிஸ்பிளே.. 90W சார்ஜிங்.. 6500mAh பேட்டரி.. SONY கேமரா.. எந்த மாடல்?

இப்படிப்பட்ட டிஸ்கவுண்ட் கிடைத்தால், ஆர்டர் போடாமல் இருக்க முடியுமா.. என்று கேட்கும்படியான விலையில் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ (Motorola Edge 70 Pro) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 6500mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 25 சதவீத தள்ளுபடி விலைக்கு மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.42,999 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.39,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. 3D டிஸ்பிளே.. 90W சார்ஜிங்.. மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 70 Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் சைமன்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8500 Extreme 4nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி720 எம்சி8 ஜிபியு (Arm Mail G720 MC8 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மட்டுமல்லாமல், 3 ஜெனரேஷன் ஓஎஎஸ் அப்டேட் மற்றும் 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. 6.8 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை பேக் செய்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. சோனி லைட்டியா 710 (Sony LYTIA 710) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேக்ரோ ஆப்ஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார் (Multispectral Sensor) சப்போர்ட் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

90W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது.

MIL-STD-810H சர்டிபிகேஷனை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. பான்டோன் லில்லி ஒயிட் (PANTONE Lily White), பான்டோன் டீ (PANTONE Tea) மற்றும் பான்டோன் டைட்டன் (PANTONE Titan) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 5எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E) மற்றும் ப்ளூடூத் 5.4 கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Pro With 50MP Camera Available At 25 Percent Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X