Home
Mobile

மிட்-ரேஞ்ச் மிரளுது.. SONY கேமரா.. 6500mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் இருக்கும் மோட்டோ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70 Pro) ஸ்மார்ட்போன் நாளை வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாகவே முழு பீச்சர்களும் வெளியாகிவிட்டன. மார்கெட்டில் விலை விவரங்களும் கசிந்துள்ளன. இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

நாளை (ஏப்ரல் 22) இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போலல்லாமல் மோட்டோரோலா நிறுவனமானது, வெளியீட்டுக்கு முன்பே முழு பீச்சர்களையும் உறுதி செய்துவிடும். அதன்படி இந்த எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் பீச்சர்களும் வெளியாகிவிட்டன.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. SONY கேமரா.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்!

அதே நேரத்தில் மார்கெட்டில் விலை விவரங்களும் கசிந்துவிட்டதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. டிசைனை பொறுத்தவரையில், வழக்கம் போல 3டி கர்வ்ட் டிஸ்பிளே டிசைன் கிடைக்கிறது. வீகன் லெதர் பேக் பேனல் மட்டுமல்லாமல், மார்பிள் பினிஷிங் (Marble Finishing) பேனல், சாடின் லக்ஸ் ஃபினிஷிங் (Statin Luxe Finishing) பேனல் கொடுக்கப்பட்டு உள்ளது.

மோட்டோரோலா 70 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 70 Pro Specifications): 6.8 இன்ச் எக்ஸ்ட்ரீம் அமோலெட் (Extreme AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிசைனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்து உள்ளது. மேலும், 1.5K சூப்பர் எச்டி (Super HD) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. அவுட்டோரிலும் அவுட்புட் கொடுக்கும்படி 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8500 Extreme 4nm) சிப்செட்டை இந்த மோட்டோரோலா 70 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இருக்கிறது. மேலும், 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு 4600 எம்எம் வேப்பர் கூலிங் சேம்பர் (Vapour Cooling Chamber) கொடுக்கப்பட்டு உள்ளது. 90W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். டிஸ்பிளே புரொடெக்சன் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பாடியும் குவாலிட்டியாக உள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) டிஸ்பிளே புரொடெக்சனை கொடுத்து உள்ளது. மேலும், எம்ஐஎல்-810எச் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ப்ரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ கொண்ட ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

நெக்ஸ்ட் மூவ், கேட்ச் மீ அப் போன்ற பீச்சர்களுடன் மோட்டோ ஏஐ (Moto ai) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வேடு கேமராவை இந்த மோட்டோரோலா 70 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மெயின் கேமராவுக்கு சோனி எல்ஒய்டிஐஏ 710 (Sony LYTIA 710) சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது.

ஏஐ போட்டோ என்ஹான்ஸ்மெண்ட் என்ஜின் (AI Photo Enhancement Engine) கிடைக்கிறது. இதில் டர்போபியூஷன் நைட் விஷன், டைனாமிக் நாய்ஸ் ரெடக்டென், ப்ரோ லெவல் பொக்கெ உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. ரூ.31,999 பட்ஜெட்டில் இந்த மோட்டோரோலா 70 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Pro With 50MP Camera 6500mAh Battery 90W Charging Launching Tomorrow in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X