Home
Mobile

இந்த Motorola போனுக்கு தான் தவம் கிடந்தோம்! இப்ப டீசர் வேற வந்துடுச்சு! 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸமார்ட்போனின் டீசர் தற்போது இந்தியாவில் வெளியாகி உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் கசிந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ விவரக்குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 70 Specifications): 6.7 இன்ச் Quad-Curved OLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 2712 x 1220 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

இந்த Motorola போனுக்கு தான் தவம் கிடந்தோம்! இப்ப டீசர் வேற வந்துடுச்சு

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.

குறிப்பாக 50எம்பி மெயின் சோனி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள ரியர் கேமரா உடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் உடன் இந்த போன் வெளியாகும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

அதுவும் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போனில் உள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது.

இந்த Motorola போனுக்கு தான் தவம் கிடந்தோம்! இப்ப டீசர் வேற வந்துடுச்சு

6500mAh பேட்டரி மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போனில் உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

மேலும் IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த போனில உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.35,000 பட்ஜெட்டில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

photos credits: intakhab, flipkart

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Pro teaser Released on Flipkart: May launch soon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X