ஆர்டர் அள்ளுறாப்ல.. ஆபர் விலையில் புது Motorola 5ஜி போன்.. 6500mAh பேட்டரி, IP69, 12GB ரேம், 50MP SONY கேமரா!
இந்தியாவில் மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆக, கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ (Motorola Edge 70 Pro) மாடலின் விற்பனை தொடங்கியது. என்ன விலை? என்ன ஆபர்? என்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ விலை: இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.38,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.41,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஆபர்: ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி பேங்க் கார்டுகளுடன், மோட்டோரோலா நிறுவனம் ரூ.2,000 வரை உடனடி வங்கி தள்ளுபடியை வழங்குகிறது. மாற்றாக, வாடிக்கையாளர்கள் ரூ.2,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸை தேர்வு செய்யலாம். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை பேன்டோன் லில்லி ஒயிட், பேன்டோன் டீ மற்றும் பேன்டோன் டைட்டன் ஆகிய 3 கலர்களில் வாங்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.8-இன்ச் சூப்பர் எச்டி (1272 x 2772 பிக்சல்ஸ்) எக்ஸ்ட்ரீம் அமோஎல்இடி 10-பிட் டிஸ்பிளே
- குறிப்பிட்ட ஆப்களில் 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 5,200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 360ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட்
- 96.8 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ
- 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 100 சதவீத டிசிஐ-பி3 கலர் கேமட்
- எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு
- எஸ்ஜிஸ் ப்ளூ லைட் ரிடக்ஷன் மற்றும் எஸ்ஜிஸ் மோஷன் ப்ளர் ரிடக்ஷன் சான்றிதழ்கள்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் சிப்செட்
- 12ஜிபி வரையிலான LPDDR5x ரேம்
- 256ஜிபி UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- சோனி LYT-710 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமரா
- 122-டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் ஆட்டோஃபோகஸ் கொண்ட 50-மெகாபிக்சல் (f/2.0) அல்ட்ராவைடு கேமரா
- குறிப்பிடப்படாத மூன்றாவது சென்சார்
- ஆட்டோஃபோகஸ் உடனான 50-மெகாபிக்சல் (f/1.9) செல்பீ கேமரா
- 4K/60 fps வரை வீடியோ ரெக்கார்டிங்
- 6,500mAh பேட்டரி
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68+IP69 ரேட்டிங்
- MIL-STD 810H நீடித்துழைப்பு சான்றிதழ்
- இன்-ஸ்க்ரீன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஐ ஓஎஸ்
- மூன்று ஆண்டுகள் வரை ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும்
- 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.4, NFC, ஒரு USB டைப்-C போர்ட், GPS, GLONASS மற்றும் கலிலியோ
- ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், ஆக்சிலரோமீட்டர், கைரோஸ்கோப் மற்றும் இ-காம்பஸ்
- அளவீட்டில் 162.7x75.6x6.99மிமீ
- எடையில் சுமார் 183 கிராம்.


Click it and Unblock the Notifications