மோட்டோரோலா களமிறக்கும் புது 5ஜி போன்.. Dimensity சிப்செட்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் (Motorola Edge 70 Pro Plus) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஜூன் 4-ம் தேதி இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில் இந்த போனின் சிப்செட் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் அம்சங்கள்: தற்போது வெளியான தகவலின்படி, மீடியாடெக் டைமன்சிட்டி 8500 சிப்செட் (Dimensity 8500 chipset) உடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி Periscope கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
Hello UX சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
அதுவும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகளும் இந்த மோட்டோரோலா போனில் உள்ளன. IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6500எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. அதேபோல் இந்த புதிய போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications