நாளை விற்பனைக்கு வரும் புதிய Motorola 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா நிறுவனம் கடந்த வாரம் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் (Motorola Edge 70 Pro Plus) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய மோட்டோரோலா போன் நாளை முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதுவும் இந்த போனை நாளை மதியம் 12 மணி அளவில் வாங்க முடியும்.
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Motorola Edge 70 Pro Plus Specifications): 6.8-இன்ச் 1.5கே 10-பிட் எக்ஸ்ட்ரீம் அமோலெட் (Extreme AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772 x 1272 பிக்சல்ஸ், 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

50எம்பி LYTIA-710 மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு அல்ட்ராபோகஸ் கேமரா + 50எம்பி periscope டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் போன். குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே (60fps) வீடியோ பதிவு செய்ய முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதுவும் இந்த செல்பி கேமராவும் 4கே (60fps) வீடியோ பதிவு செய்யும்.
சக்திவாய்ந்த 3.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் டைமன்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் 4என்ம் SoC (Octa-Core Dimensity 8500 Extreme 4nm SoC) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் தரமான Arm Mail-G720 MC8 GPU கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6500mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டால்பி அட்மாஸ், ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

வெப்பத்தை வெளியேற்றுவதற்காக இந்த போனில் 4600mm2 வேப்பர் சேம்பரும் உள்ளது. அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய மோட்டோரோலா போனில் உள்ளன. சிக்கரி காபி, ஜின்ஃபாண்டெல் மற்றும் ஸ்டார்மி சீ ஆகிய மூன்று பேன்டோன் கலர்களில் வெளியாகி உள்ளது
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் போனின் விலை ரூ.47,999-ஆக உள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications