நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புது Motorola 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் (Motorola Edge 70 Pro Plus) நாளை (ஜூன் 4) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Motorola Edge 70 Pro Plus Specifications): மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 8500 சிப்செட் (Dimensity 8500 chipset) உடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி Periscope கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் Hello UX சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகளும் இந்த மோட்டோரோலா போனில் உள்ளன. IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6500எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.47,999 விலையில் இந்த புதிய போன் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications