சிக்ஸ் இல்ல, செஞ்சுரி அடிச்ச Motorola.. 6500mAh பேட்டரி, SONY LYTIA கேமரா, IP69.. இன்னொரு புது 5ஜி போன்!
மோட்டோரோலா (Motorola) நிறுவனம், இந்திய சந்தையில் பேக்-டூ-பேக் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ (Motorola Edge 70 Pro) மாடல், இந்தியாவில் விற்பனைக்கு வந்து சில வாரங்களே ஆகின்றது.
இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனத்தின் அடுத்த பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆக மோட்டோ எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் (Motorola Edge 70 Pro Plus) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான ஒரு புதிய ஃபிளிப்கார்ட் மைக்ரோசைட் (Flipkart Microsite) இப்போது நேரலைக்கு வந்துள்ளது.

மோட்டோரோலா நிறுவனம் இன்னும் அந்த பிளிப்கார்ட் பக்கத்தில் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் வலைப்பக்கத்தின் URL-ல் எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் பிராண்டிங் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக பெரும்பாலும் இது 2026 மே மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னரே குறிப்பிட்டபடி, மோட்டோரோலா நிறுவனம், அதன் எட்ஜ் 70 ப்ரோவை இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ரூ.38,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் அப்பர் மிட்-ரேன்ஜ் விலை பிரிவில் பிளாக்ஷிப் ரக ஹார்ட்வேரை கொண்டுவந்தது, ஆனால் க்ளோபல் வேரியண்ட்டில் இருந்த சில அம்சங்களை இது தவிர்த்துவிட்டது. இப்போது ப்ரோ பிளஸ் அந்த இடைவெளியை நிரப்ப முயல்கிறது.
பிளிப்கார்ட்டில் உள்ள மைக்ரோசைட் வழியாக, மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பிரீமியம் உணர்வை கொடுக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டீசர் படங்கள், பர்கண்டி கலரில் கர்வ்டு பேக் பேனல், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் சாடின் க்ளோத் ஆல் மூடப்பட்ட டெக்ஸ்சர்டு ஃபினிஷ்களை காட்டுகின்றன,
கேமரா மாட்யூலை சுற்றியுள்ள எழுத்துக்களில் "LYTIA", "OIS", "2.0µm", மற்றும் "12.81 mm ஃபோக்கல் லென்த்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் சோனியின் LYTIA இமேஜிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுவதை உணர்த்துகிறது. மோட்டோரோலா தனது டீசர் விளம்பரத்தில் போர்ட்ரெய்ட் போட்டோகிராஃபியிலும் கவனம் செலுத்துகிறது, இது கூடுதலாக உள்ள ஒரு கேமரா சென்சார் - ஒரு பிரத்யேக டெலிஃபோட்டோ லென்ஸாக இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
க்ளோபல் மற்றும் இந்திய எட்ஜ் 70 ப்ரோ மாடல்கள் வெவ்வேறு அம்சங்களை கொண்டிருந்ததால், எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் என்பது அடிப்படையில் க்ளோபல் எட்ஜ் 70 ப்ரோவை இந்தியாவிற்காக வேறு பெயரில் மறுபேக்கேஜ் செய்திருக்கலாம் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நடந்தால், வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், இசிம் ஆதரவு மற்றும் 3.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளிட்ட அம்சங்களை நாம் ப்ரோ பிளஸ் மாடலில் எதிர்பார்க்காலம்
மேலும் இது 6.8-இன்ச் 144ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமென்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் சிப்செட், LPDDR5X ரேம், UFS 4.1 ஸ்டோரேஜ், IP68/IP69 ரேட்டிங் மற்றும் 90W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 6,500mAh பேட்டரி ஆகிய அம்சங்களையும் பேக் செய்யலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் எதிர்பார்க்கப்படும் விலை: மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோவின் க்ளோபல் வேரியண்ட்டின் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.89,000 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. அதே சமயம், அதே எட்ஜ் 70 ப்ரோவின் இந்திய வேரியண்ட் ரூ.38,999 முதல் வாங்க கிடைக்கிறது
இந்தியாவில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் விலை நிர்ணயத்தில் மிகவும் தீவிரமாக செயல்படுவதால், ஐரோப்பிய விலைகளுடன் இந்திய விலையை ஒருபோதும் ஒப்பிட கூடாது என்பதை நமக்கு உணர்த்துகிறது. மேம்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் கொண்ட மோட்டோரோலா சிக்னேச்சர் மாடல் கூட இந்தியாவில் ரூ.59,999 க்கு தான் வாங்க கிடைக்கிறது. ஆக ப்ரோ பிளஸ் மாடல் ரூ.40,000 - ரூ..55,000 பிரிவில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications