ஜூன்.4 அறிமுகம்.. Moto-வின் புது கொம்பன்.. 6500mAh பேட்டரி.. OIS கேமரா.. 90W வயர்டு, 15W வயர்லெஸ் சார்ஜிங்!
மோட்டோரோலா (Motorola) நிறுவனம், அடுத்த வாரம், வருகிற ஜூன் 4 ஆம் தேதி அன்று, அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் (Motorola Edge 70 Pro Plus) மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.
வெளியீட்டு நாள் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலைப்பாட்டில், மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும் பிளிப்கார்ட் மைக்ரோசைட் மற்றும் மோட்டோரோலா இந்தியா வலைத்தளம் வழியாக அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கூடவே கலர் ஆப்ஷன்கள் குறித்த விவரங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் சிப்செட் (MediaTek Dimensity 8500 Extreme chipset), 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி UFS 4.1 ஸ்டோரேஜ் காம்பினேஷனில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டு இயங்கும். இந்த ஸ்மார்ட்போனிற்கு ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன், மூன்று வருடங்கள் வரை ஓஎஸ் மேம்படுத்தல்களும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பில் மூன்று 50-மெகாபிக்சல் ரியர் சென்சார்கள் உள்ளன.
பிரைமரி கேமராவானது, OIS ஆதரவுடன் சோனியின் LYTIA 710 சென்சாரை பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் இரண்டாவது சென்சார் அல்ட்ரா-வைட் மற்றும் மேக்ரோ புகைப்படங்களை கையாளுகிறது. மூன்றாவது கேமரா, 3.5x ஆப்டிகல் ஜூம் மற்றும் 50x சூப்பர் ஜூம் ஆதரவு வரையிலான பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகும்.
முன்பக்கத்தில், இந்த போனில் ஆட்டோஃபோகஸ் வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. வீடியோ ரெக்கார்டிங்கை பொறுத்தவரை இது 60fps வேகத்தில் 4K HDR10+ வரை செல்கிறது, அதே நேரத்தில் ஸ்லோ-மோஷன் பதிவு 120fps வேகத்தில் 4K வரை ஆதரிக்கிறது.
பேட்டரியை பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 6500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி உள்ளது, இது 90W வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. கனெக்டிவிட்டி வசதிகளைப் பொறுத்தவரை, இது வைஃபை 6இ, ப்ளூடூத் 5.4, என்எப்சி மற்றும் யுஎஸ்பி-ஐ ஆகியவற்றை வழங்குகிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, திங்க்ஷீல்ட் (ThinkShield) ப்ரொடெக்ஷன், டிஸ்பிளேவில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், டால்பி அட்மாஸ் உடனான ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஐபி68 / ஐபி69 நீர் எதிர்ப்பு திறன் மற்றும் அதிர்ச்சியை தாங்கும் MIL-STD-810H சான்றிதழ் ஆகியவைகளை கொண்டுள்ளது
மோட்டோரோலா முன்பக்கத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷனை பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் பின்பக்க பேனல் வுட், சில்க் மற்றும் ட்வில் போன்ற வடிவமைப்புகளில் வருகிறது. இது ஸ்டார்மி ஸீ (பச்சை), ஸின்ஃபாண்டெல் (சிவப்பு) மற்றும் சிக்கரி காபி (மரம்) போன்ற பேன்டோன் கலர்களில் கிடைக்கும். பெரிய பேட்டரி இருந்தபோதிலும், இந்த போன் வெறும் 7.19 மிமீ முதல் 7.34 மிமீ தடிமன் மட்டுமே கொண்டுள்ளது மற்றும் 190 கிராம் எடையை கொண்டுள்ளது.
இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை: மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அதன் ஸ்டாண்டர்ட் எட்ஜ் 70 ப்ரோவை ரூ.38,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது, எனவே எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் இந்த சீரீஸில் இன்னும் உயர் நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு, மேம்படுத்தப்பட்ட டிஸ்பிளே அம்சங்கள் மற்றும் புதிய பிரீமியம் ஃபினிஷ்கள் போன்ற கூடுதல் அம்சங்களுடன் வருவதால், இது ரூ.50,000 க்கும் குறைவான பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இது உண்மையானால், இது எட்ஜ் 70 சீரிஸில் இதுவரை இல்லாத மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனாக மாறக்கூடும்.


Click it and Unblock the Notifications