இந்தியாவையே மிரள விட போகும் புதிய Motorola 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் HDR10+ சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. எனவே இந்த மாதம் இறுதியில் அல்லது வரும் மே மாதம் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மர்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் சில விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 70 Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா போன்.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.
அதுவும் 6.7 இன்ச் Quad-Curved OLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 2712 x 1220 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போனில் உள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது.
6500mAh பேட்டரி மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போனில் உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த போனில உள்ளதாக கூறப்படுகிறது.

50எம்பி மெயின் சோனி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள ரியர் கேமரா உடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் உடன் இந்த போன் வெளியாகும்.
அனைத்து சிறப்பான அம்சங்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போன் ரூ.40,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
photos credits: intakhab


Click it and Unblock the Notifications








