Home
Mobile

Moto மிரட்டுதே.. ரூ.30K பட்ஜெட்டில் பரபரப்பு.. சின்ன பேட்டரி, ஸ்லிம் டிசைன் ஆனா 68W சார்ஜிங், 12GB ரேம்!

மோட்டோரோலா (Motorola) நிறுவனமானது, லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒன்பிளஸ் 15, ஐக்யூ 15, ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஆகிய பிளாக்ஷிப் மாடல்களுக்கான "மலிவான ஆல்ட்டர்நேட்டிவ்" ஆகவும், ஐபோன் ஏர் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஆகிய மாடல்களுக்கான "போட்டியாளர் ஆகவும்" ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

அது மோட்டோ எக்ஸ்70 ஏர் (Moto X70 Air) ஸ்மார்ட்போன் ஆகும். இந்தியாவிற்கு இது மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) ஸ்மார்ட்போனாக வரும். இது நேற்று (அக்.27) சீனாவில் மோட்டோ எக்ஸ்70 ஏர் என்கிற பெயரின் கீழ் அறிமுகமானது. இது "அதே அம்சங்களுடன்" இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் மோட்டோ எட்ஜ் 70 மாடலாக அறிமுகமாகும்.

Moto மிரட்டுதே.. ரூ.30K பட்ஜெட்டில் பரபரப்பு!

என்ன விலை? எப்போது இந்திய அறிமுகம்? சீனாவில் மோட்டோ எக்ஸ்70 ஏர் ஸ்மார்ட்போன் ஆனது கேட்ஜெட் கிரே, லில்லி பேட் மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.32,205 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.35,925 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இந்த போன் ஏற்கனவே ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது மற்றும் அக்டோபர் 31 முதல் சீனாவில் விற்பனைக்கு வர உள்ளது. இது எப்போது மோட்டோரோலா எட்ஜ் 70 ஆக இந்தியாவிற்கு வரும் என்கிற வெளியீட்டு தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் இது டிசம்பர் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்.

மோட்டோ எக்ஸ்70 ஏர் (மோட்டோரோலா எட்ஜ் 70) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 6.7-இன்ச் (2712 x 1220 பிக்சல்ஸ்) 1.5கே 10-பிட் பிஓஎல்இடி டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 4500 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்

- 4 என்எம்குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 4 மொபைல் பிளாட்ஃபார்ம் (Qualcomm Snapdragon 7 Gen 4 (4nm) Mobile Platform)
- அட்ரினோ 722 ஜிபியு
- 12 ஜிபி ரேம்
- 256 ஜிபி மற்றும் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்

- எப்/1.8 அபெர்க்ஷர் கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா
- ஓஐஎஸ் (OIS) ஆதரவு உடனே 50எம்பி 120º அல்ட்ரா-வைட் கேமரா
- 4கே தரத்தில் 30fps வரையிலான வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு
- 50எம்பி செல்பீ கேமரா
- 4800எம்ஏஎச் பேட்டரி
- 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு

- யுஎஸ்பி டைப்-சி ஆடியோ
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- டால்பி அட்மாஸ் ஆதரவு
- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 + ஐபி69 ரேட்டிங்
- இராணுவ தர நீடித்து நிலைப்புத்தன்மை (MIL-STD-810H) சர்ட்டிபிகேட்
- 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ

- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைஃபை 6இ 802.11 ஏஎக்ஸ் (2.4GHz / 5GHz)
- ப்ளூடூத் 5.4
- ஜிபிஎஸ்
- யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- அளவீட்டில் 159.87x 74.28x 5.99 மிமீ
- எடையில் 159 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Price Almost Confirmed after Moto X70 Air Launch See Full Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X