Home
Mobile

சத்தமின்றி அறிமுகமானது புதிய மோட்டோரோலா 5ஜி போன்.. 200எம்பி கேமரா.. 6500எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 பிளஸ் ஸ்மார்ட்போன தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 200எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 பிளஸ் அம்சங்கள் (motorola edge 70 plus specifications): 6.78-இன்ச் Extreme AMOLED டிஸ்பிளே உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772 x 1272 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், 10-பிட் கலர், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சத்தமின்றி அறிமுகமானது புதிய மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மாடல்.

200எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன. அதுவும் இந்த போன் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 பிளஸ் போன் வெளியாகி உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)இந்த மாடலில் உள்ளது.

சத்தமின்றி அறிமுகமானது புதிய மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?

6500எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 70 பிளஸ் போனின் ஆரம்ப விலை 599.99 Euros (இந்திய மதிப்பில் ரூ.65,910)-ஆக உள்ளது. வரும் வாரங்களில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் இந்த புதிய மோட்டோரோலா போன் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
motorola edge 70 plus With 6500mAh battery launched global: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X