Home
Mobile

நாளை களமிறங்கும் புது Motorola போன்.. pOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) ஸ்மார்ட்போனை சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 போன் முதல் முறையாக நாளை (டிசம்பர் 23) விற்பனைக்கு வருகிறது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நாளை மதியம் 12 மணி அளவில் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 போன் விற்பனைக்கு வரும். இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நாளை களமிறங்கும் புது மோட்டோரோலா போன்.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை சற்று குறைவான விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (Motorola Edge 70 Specifications): 6.7 இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 2712 x 1220 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.

குறிப்பாக ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி மோட்டோரோலா எட்ஜ் 70 போனில் உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் 5.99 எம்எம் தடிமன், 159 கிராம் எடை கொண்டுள்ளது.

இந்த போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் உள்ளன. குறிப்பாக இந்த போன் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளிவந்துள்ளது.

நாளை களமிறங்கும் புது மோட்டோரோலா போன்.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 70 போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளன. மேலும் இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த போன் பேன்டோன் லில்லி பேட் (Pantone Lily Pad), பேன்டோன் கேஜெட் கிரே (Pantone Gadget Gray), பேன்டோன் பிராஞ்ச் கிரீன் (Pantone Bronze Green) நிறங்களில் வாங்க கிடைக்கும். 5000mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
motorola edge 70 phone will go on sale for the first time tomorrow: check price, specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X