மொத்த சாம்ராஜ்யமே மிரளுது.. 5.99 மிமீ-க்கு முடிச்ச Motorola போன்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளும்படி 4800mAh பேட்டரியை 5.99 மிமீ தடிமனில் கொடுத்த மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola edge 70) மாடலின் பான்டோன் கிளவுட் டான்சர் (Pantone Cloud Dancer) வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்களுடன் (Swarovski Crystals) அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை பார்க்கலாம்.
குளோபல் மார்கெட்டில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் பான்டோன் லில்லி பேட் (PANTONE Lily Pad), பான்டோன் கேட்ஜெட் கிரே (PANTONE Gadget Grey) மற்றும் பான்டோன் ப்ரோன்ஸ் கிரீன் (PANTONE Bronze Green) ஆகிய கலர்களில் களமிறங்கியது. இப்போது, பான்டோன் கிளவுட் டான்சர் (Pantone Cloud Dancer) கலரில் வந்துள்ளது.

2026ஆம் ஆண்டின் பான்டோன் கலராக இந்த கிளவுட் டான்சர் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் பேக் பேனலில் ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட மார்கெட்களில் மட்டுமே கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் மோட்டோரோலா எட்ஜ் 70 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (Motorola edge 70 Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.
6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்து இருக்கிறது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்படுகிறது. அல்ட்ரா ஸ்லிம் மாடலாக இருந்தாலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 4K ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கொடுத்து இருக்கிறது. மேலும், 50 எம்பி செல்பீ கேமராவையும் இந்த மோட்டோரோலா போன் கொடுக்கிறது.
டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு கிடைத்தது, மொத்த பாடி MIL-STD-810H சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கப்படுகிறது. மேலும், IP68 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆகலே, அல்ட்ரா ஸ்லிம் பாடி கிடைத்தாலும், டியூரபிலிட்டி பிரீமியமாக இருக்கிறது.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனுக்கு 4800mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் (TurboPower Fast Charging) மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 5.99 மிமீ தடிமன் மட்டுமே கொடுக்கிறது. வெறும் 159 கிராம் எடை மட்டுமே கொடுக்கிறது. இதைவிட ஸ்லிமாக மாடல்கள் இருக்கின்றன.
ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களில் கிடைக்கின்றன. ஆனால், அந்த மாடல்களில் 4800mAh பேட்டரி கிடையாது. அதைவிட கம்மியான கேபாசிட்டி கொண்ட பேட்டரிகளே கிடைக்கின்றன. குளோபல் மார்கெட்டில் இந்த மாடலின் விலை ரூ.81,310 பட்ஜெட்டில் இருக்கிறது. இந்தியாவில் விலையில் மாற்றம் இருக்கும். குளோபல் மார்கெட்டைவிட மலிவாக எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








