Home
Mobile

இது வந்தா போதும், மொத்தமா மிரளும்.. காம்பாக்ட் Motorola ஸ்மார்ட்போன்.. புது Neo வேரியண்ட்.. எந்த மாடல்?

மோட்டோராலா எட்ஜ் 70 மேக்ஸ் (Motorola Edge 70 Max) ஸ்மார்ட்போனுக்கு அடுத்த மாடலாகவும், காம்பாக்ட் டிசைனிலும் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ (Motorola Edge 70 Neo) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போனில் அப்கம்மிங் ஓஎஸ் கிடைக்க இருப்பது தெரியவந்துள்ளது.

இந்திய மார்கெட்டில் மோட்டோரோலா நிறுவனத்தின் நியோ சீரிஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் கடைசி மாடலாக மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ (Motorola Edge 60 Neo) ஸ்மார்ட்போன் வெளியாகியது. வெறும் 6.4 இன்ச் டிஸ்பிளே, 174.5 கிராம் எடையில் காம்பாக்ட் மாடலாக இருந்தால், நல்ல வரவேற்பை பெற்றது.

இது வந்தா போதும், மொத்தமா மிரளும்.. காம்பாக்ட் Motorola ஸ்மார்ட்போன்!

இப்போது, மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டுக்கு மோட்டோரோலா நிறுவனம் தயாராகிவிட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ வெளியாகியது. ஆகவே, இந்த செப்டம்பர் மாதத்தில் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். இதில் அப்கம்மிங் ஓஎஸ் வர இருக்கிறது.

அதாவது, ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) பீட்டா வெர்ஷனானது, இதில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, இந்த ஸ்மார்ட்போன் வெளியாவதற்கு முன்னதாக ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் வந்துவிட்டால் போதும், இதிலும் நேரடியாக ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் கிடைத்துவிடும். இதை தவிர வேறு விவரங்கள் வெளியாகவில்லை. இப்போது, 60 நியோ மாடலை பார்க்கலாம்.

ஏனென்றால், இதில் கிடைத்த பீச்சர்கள் அப்கிரேட் செய்யப்பட்டு மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போனில் கிடைக்கும். அதேபோல இந்த ஸ்மார்ட்போனின் விலையை வைத்து அடுத்த மாடலின் விலையை யூகிக்க முடியும். ஆகவே, மோட்டோரோலா எட்ஜ் 60 நியோ ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலையை தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மோட்டோரோலா 60 நியோ அம்சங்கள் (Motorola Edge 60 Neo Specifications): 6.4 இன்ச் (1200 x 2670 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. சோனி லைடியா 700சி (Sony LYTIA 700C) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 10 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது.

32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது.

டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது. இந்தியாவில் ரூ.25,999 பட்ஜெட்டில் அறிமுகமானது. ஆகவே, மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் ரூ.30,000 முதல் ரூ.35,000 பட்ஜெட்டில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Neo With Android 17 Launching Soon in India Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X