Home
Mobile

கொஞ்சம் பொறுங்க.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 200எம்பி கேமரா.. வருகிறது மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ (Motorola Edge 70 Neo) விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது கீக்பெஞ்சில் தளத்தில் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதுவும் கீக்பெஞ்சில் தளத்தில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ போன் ஆனது சிங்கிள்-கோர் சோதனையில் 723 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனையில் 2,943 புள்ளிகளையும் பெற்றது. இதுதவிர இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.

கொஞ்சம் பொறுங்க.. வருகிறது மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ அம்சங்கள் (Motorola Edge 70 Neo Specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 7s Gen 3) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

6.3-இன்ச் pOLED டிஸ்பிளே உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

200எம்பி மெயின் கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த போனின் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனில் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழஙகும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ போனில் உள்ளன. தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.40,000-க்கு கீழ் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ போன் அறிமுகாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

photo credits: gizmochina, motorola

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Neo Spotted on Geekbench With Snapdragon 7-Series Chip
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X