மார்க்கெட்டே அதிர போகுது.. 50MP கேமரா.. 7000mAh பேட்டரி.. வருகிறது Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ (Motorola Edge 70 Neo) ஸ்மார்ட்போன் வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக அசத்தலான வடிவமைப்புடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவரும். இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ அம்சங்கள் (Motorola Edge 70 Neo Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 7s Gen 3) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

6.3-இன்ச் pOLED டிஸ்பிளே உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
50எம்பி மெயின் கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த போனின் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் 7000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழஙகும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ போனில் உள்ளன. தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.30,000-க்கு கீழ் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ போன் அறிமுகாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மவுண்டன் வியூ, மில்கி ப்ளூ, சேஜ் மற்றும் கிரே லிலாக் ஆகிய நான்கு கலர்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.
photo credit: 91mobiles, the Mac Observer, tipster Sanju Choudhary


Click it and Unblock the Notifications
