அடுத்த மோட்டோரோலா 5ஜி போன் ரெடி.. 200எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ (Motorola Edge 70 Neo) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த புதிய மோட்டோரோலா போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ போனின் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ அம்சங்கள் (Motorola Edge 70 Neo Specifications): 6.4-இன்ச் pOLED டிஸ்பிளே உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7450 (MediaTek Dimensity 7450) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங்
200எம்பி மெயின் கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனில் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கிறது.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழஙகும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
photo credit: 91mobiles, motorola


Click it and Unblock the Notifications
