Home
Mobile

வாங்குனா இப்படி வாங்கனும்.. பட்ஜெட்ல 7100mAh பேட்டரி.. 90W சாா்ஜிங்.. QHD+ டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?

மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், பட்ஜெட் விலையில் மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகரான சிப்செட், பேட்டரி, கேமரா உள்ளிட்ட பீச்சர்களை கொடுக்கும். இதே பீச்சர்களுடன் கிடைக்கும் மற்றொரு பிராண்ட்டினுடைய ஸ்மார்ட்போன்களின் விலை கூடுதலாக இருக்கும். இதே கான்செப்ட்டில் மற்றொரு மாடல் சேர்ந்துள்ளது.

இந்திய மார்கெட்டில் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் (Motorola Edge 70 Max) ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த ஜூன் 4ஆம் தேதிதான் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ (Motorola Edge 70 Pro+) வெளியாகியது. இப்போது, அடுத்த ஒரு மாதத்தில் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போனை களமிறக்க அந்த நிறுவனம் மும்முரம் காட்டி இருக்கிறது.

வாங்குனா இப்படி வாங்கனும்.. பட்ஜெட்ல 7100mAh பேட்டரி.. 90W சாா்ஜிங்!

இதனால், வெளியீட்டுக்கு முன்பே முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. வழக்கம்போல பிரீமியம் லுக் கொண்ட மாடலாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் இருக்கிறது. பிளாட் டிஸ்பிளே டிசைனை கொடுக்கிறது. இருப்பினும், குவாட் எச்டிபிளஸ் ரெசொலூஷன், 120 FPS பிஜிஎம்ஐ கேமிங் உள்ளிட்ட பீச்சர்களை பேக் செய்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் அம்சங்கள் (Motorola Edge 70 Max Specifications): குவாட்எச்டிபிளஸ் (Quad HD+) ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளேவை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 7000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120FPS பிஜிஎம்ஐ கேமிங் அவுட்புட் கொடுத்துள்ளது.

டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் உள்ளது. பிளாட் டிசைன் கொண்ட இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Coring Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்டுள்ளது. 58 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 7100mAh பேட்டரியை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் முதல்முறையாக ஃபாஸ்ட் மேக்னட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் (Fast Megnetic Wireless Charging) கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் கொண்ட மாடலாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. 5500 எம்எம் வேப்பர் கூலிங் சேம்பர் (Vapour Cooling Chamber) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Gen 5) சிப்செட்டை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. முன்னதாக வெளியான மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ மாடலில் கிடைக்க மோட்டோ ஏஐ 2.0 (Moto AI 2.0) எதிர்பார்க்கலாம்.

அதேபோல 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை எதிர்பார்க்கலாம். எட்ஜ் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கும். ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + டெலிபோட்டோ கேமரா கொண்ட மாடலாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் இருக்கும்.

மேலும் பான்டோன் கலர் வேரியண்ட்களில் கிடைக்கும். பிளிப்கார்ட் மைக்ரோசைட் வழியாக டிசைன் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, 2 கலர்களில் வெளியாக இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொடுத்தாலும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஜூலை 15ஆம் தேதிக்கு முன் முழு பீச்சர்கள் வெளியாகும்.

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Max With Snapdragon 8 Gen 5 Chipset Specification Confirmed Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X