பிளிப்கார்ட் பிச்சிக்கும்.. ரூ.5,000 ஆஃபரில் 7100mAh பேட்டரி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் வெளியான மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் (motorola edge 70 Max) ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை முதல் தொடங்க இருக்கிறது. ரூ.5,000 அறிமுக சலுகையில் கிடைக்க இருப்பதால், மோட்டோ பிரியர்கள் வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.
மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் விலை (motorola edge 70 Max Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.54,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆகவும் இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.5,000 அறிமுக சலுகை போக ரூ.49,999 ஆரம்ப விலைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்யலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் அம்சங்கள் (motorola edge 70 Max Specifications): 6.8 இன்ச் (1440 x 3168 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 7000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு வருகிறது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) மற்றும் அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் இருக்கிறது. 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுத்துள்ளது.
மேலும், 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. சோனி லைட்டியா 710 (Sony LYTIA 710) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்பா வைடு கேமராவை கொடுத்துள்ளது. ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
மேக்ரோ ஆப்ஷன் கொடுத்துள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 4K வீடியோ ரெக்கார்டிங்குடன் 32 எம்பி ஃப்ரன்ட் கேமராவை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
90W டர்போபவர் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7100mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. 25W மேக்னட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் (Magnetic Wireless Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.29 தடிமன் மற்றும் 221 கிராம் எடையை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது.
ஆகவே, எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water & Dust Resistant) கொடுக்க IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/NSA), டுயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications