Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.2,750 டிஸ்கவுண்ட்.. SONY கேமரா.. 7100mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்களை கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமானால், இப்போது டிஸ்கவுண்ட் விலைக்கு கிடைக்கும் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் (motorola edge 70 Max) ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். சோனி சென்சார் கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7100mAh பேட்டரி உள்ளிட்ட பீச்சர்கள் கொடுக்கப்படுகின்றன.

பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.54,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,750 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.52,249 விலைக்கு இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.2,750 டிஸ்கவுண்ட்.. SONY கேமரா.. மாடல்?

மேட் கிளாஸ் பேக் பேனல் (Matte Glass Back Panel) டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. மேலும், பான்டோன் அக்வா கிரே (Pantone Aqua Gray), பான்டோன் ஐஸ் மெல்ட் (Pantone Ice Melt) மற்றும் பான்டோன் டார்க் ஷேடோ (Pantone Dark Shadow) ஆகிய கலர்களில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

பிரீமியம் டியூரபிலிட்டி கொடுக்கிறது. டிராப் ரெசிஸ்டன்ஸ், ஹாட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்ட 16 டெஸ்டிங்கை முடிக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு கொடுக்கப்படும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதுபோக 1.8 மீட்டர்கள் ஆழம் வரை வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

இப்படி 30 நிமிடங்கள் வரையில் நீருக்குள் தாக்குப்பிடிக்கும். இந்த ரெசிஸ்டன்ஸ் கொடுக்க IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், டிஸ்பிளேவுக்கு தனியாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது, மற்ற பீச்சர்களை பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் அம்சங்கள் (Motorola Edge 70 Max Specifications): 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (3nm Octa Core Snapdragon 8 Gen 5) சிப்செட் மற்றும் அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது.

3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. 6.8 இன்ச் (1440 x 3168 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2K ரெசொலூஷன் கிடைக்கிறது.

7000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ ஆப்ஷன் கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு சோனி லைட்டியா 710 (Sony LYTIA 710) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 90W டர்போபவர் சார்ஜிங் கொண்ட 7100mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், 25W மேக்னட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Motorola edge 70 Max With 8GB RAM Available At Rs 2750 Discount in Flipkart Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X