Home
Mobile

நாளை விற்பனைக்கு வரும் புதிய Motorola 5ஜி போன்.. 7100mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் கடந்த வாரம் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் (Motorola Edge 70 Max) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய போன் நாளை (ஜூலை 20) முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்க முடியும். இப்போது இந்த போனின் விலை, அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் அம்சங்கள் (Motorola Edge 70 Max specifications): மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் குவாட் எச்டி பிளஸ் Extreme AMOLED டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,440 x 3,168 பிக்சல்ஸ், 7000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

நாளை விற்பனைக்கு வரும் புதிய Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும்இ வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போன் வெளியாகி உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த மோட்டோரோலா போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த போனில் உள்ளது.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் 7100எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 25W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

நாளை விற்பனைக்கு வரும் புதிய Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் உள்ளன. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 7, ஜிபிஎஸ், புளூடூத் 6, பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo) யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போன் வெளிவந்துள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 3 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 5 வருடங்களுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பான்டோன் அக்வா கிரே, பான்டோன் டார்க் ஷேடோ மற்றும் பான்டோன் ஐஸ் மெல்ட் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Max will go on sale for first time tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X