Home
Mobile

சும்மா ஒரு போட்டோவ விட்டதுக்கே மொத்த சோஷியல் மீடியாவும் பத்திகிச்சு! லான்ச் மட்டும் ஆச்சுனா ஒன்பிளஸ் காலி!

மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் (Motorola Edge 70 Max) ஸ்மார்ட்போன் தற்போது வயர்லெஸ் பவர் கன்சார்டியம் (WPC) தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போன் வெளியாகும். சமீபத்தில் இந்த போனின் படங்கள் இணையதளத்தில் வெளியாகி அதிக வைரலாகி உள்ளது. இப்போது ஆன்லைனில் வெளியான மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போனின் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சும்மா ஒரு போட்டோவ விட்டதுக்கே மொத்த சோஷியல் மீடியாவும் பத்திகிச்சு!

மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் அம்சங்கள் (Motorola Edge 70 Max specifications): மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் டிஸ்பிளே உடன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen5) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன். அதுவும் இதில் சோனி சென்சார் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த போனில் உள்ளது.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சும்மா ஒரு போட்டோவ விட்டதுக்கே மொத்த சோஷியல் மீடியாவும் பத்திகிச்சு!

குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் 7000எம்ஏஎச் பேட்டரி அல்லது 8000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 25W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.

photo credits: DigitalCitizen

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Max to launch soon with 25W wireless charging
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X