அறிமுகமானது புதிய மோட்டோரோலா 5ஜி போன்.. IP69 ரேட்டிங்.. 7100எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா நிறுவனம் இன்று புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் (Motorola Edge 70 Max) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது. இபபோது இந்த போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் அம்சங்கள் (Motorola Edge 70 Max specifications): 6.8-இன்ச் குவாட் எச்டி பிளஸ் Extreme AMOLED டிஸ்பிளே உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,440 x 3,168 பிக்சல்ஸ், 7000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும்இ வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போன் வெளியாகி உள்ளது. அதேபோல் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த மோட்டோரோலா போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
7100எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 25W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் உள்ளன. 5ஜிஇ 4ஜி எல்டிஇ, வைஃபை 7, ஜிபிஎஸ், புளூடூத் 6, பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo) யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போன் வெளிவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 3 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 5 வருடங்களுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பான்டோன் அக்வா கிரே, பான்டோன் டார்க் ஷேடோ மற்றும் பான்டோன் ஐஸ் மெல்ட் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் விலை
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் மாடலின் விலை ரூ.54,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் மாடலின் விலை ரூ.59,999-ஆக உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.5000 தள்ளுபடியும் உள்ளது. வரும் ஜூலை 20-ம் தேதி பிளிப்கார்ட், மோட்டோரோலா.இன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இந்த போன் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications