இந்தியாவையே மிரள விட போகும் Motorola.. புது 5ஜி போன் ரெடி.. 50எம்பி சோனி கேமரா.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் அடுத்து மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
அதன்படி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியும் இந்த போனில் உள்ளது. அதேபோல் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black), சேஜ் கிரீன் (Sage Green) மற்றும் கிளேசியர் ப்ளூ கலர்களில் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போன் வெளியாகும்.

மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் அம்சங்கள் (Motorola Edge 70 Max specifications): ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன். அதுவும் இதில் சோனி சென்சார் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
6.7-இன்ச் டிஸ்பிளே உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

7000எம்ஏஎச் பேட்டரி அல்லது 8000எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வட்டு வடிவ வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.
photo credits: digitalcitizen


Click it and Unblock the Notifications