Moto மிரட்டலடி.. 7100mAh பேட்டரி, 90W சார்ஜிங், 12GB ரேம், 50MP Sony கேமராவுடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் வருகிற ஜூலை 15 ஆம் தேதி அன்று இந்தியாவில் - மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் (Motorola Edge 70 Max) என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதன் சிறப்பம்சங்கள் குறித்த பல விவரங்கள் ஏற்கனவே பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் உள்ள பிரத்யேகப் பக்கத்தில் (microsite) வெளியிடப்பட்டுள்ளன.
இருப்பினும், கேமரா குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், அறிமுகத்திற்கு முன்னதாகவே இந்த ஸ்மார்ட்போனின் ஹேண்ட்ஸ்-ஆன் வீடியோ (hands-on video) ஒன்று வெளியாகியுள்ளது, இது அதன் வடிவமைப்பை தெளிவாக பார்க்க உதவுகிறது. வெளியான வீடியோவில், மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது வெளிர் பச்சை நிறத்தில் (pale green) உள்ளது.

மேலும் வீடியோ வழியாக இது பெசல்களுடன் (bezels) கூடிய பிளாட் ஆன டிஸ்பிளே மற்றும் பின்புறத்தில் சற்று உயர்ந்த சதுர வடிவ கேமரா அமைப்பை கொண்டுள்ளது. கேமரா பகுதியை உற்றுநோக்கும்போது, அதில் ஓஐஎஸ் (OIS) வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் சோனி லைட்டியா (Sony Lytia) ப்ரைமரி கேமரா இருப்பது உறுதியாகிறது.
மேலும் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது [பிளாட் ஆன அலுமினிய விளிம்புகள் மற்றும் கிளாஸ் பேக்கையும் கொண்டுள்ளது. இதன் இடது பக்கத்தில் பிரத்யேக ஏஐ பட்டானும், வலது பக்கத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்களும் அமைந்துள்ளன.
இந்த வீடியோ ஒருபக்கம் இருக்க, டிப்ஸ்டர் சுதன்ஷு அம்ப்ஹோர் (Sudhanshu Ambhore) வழியாக இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் லீக் செய்யப்பட்டுள்ளன. அது - Onyx Black, Sage Green மற்றும் Glacier Blue உள்ளிட்ட பான்டோன் கலர் ஆப்ஷன்களில் இந்த போன் வருவதை காட்டுகின்றன.
மேலும் அதே டிப்ஸ்டர் வழியாக, இந்த ஸ்மார்ட்போனில் 6.82-இன்ச் LTPO OLED டிஸ்பிளே இடம்பெற்று உள்ளதாகவும், இது Quad HD+ ரெசல்யூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate) மற்றும் 7,000 நிட்ஸ் (nits) வரையிலான பீக் ப்ரைட்னஸ் (peak brightness) ஆகியவற்றை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 8 Gen 5 சிப்செட் மூலம் இயங்குவதும், அதனுடன் 12GB வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 7,100mAh பேட்டரி இணைக்கப்பட்டிருப்பதும் ஏற்கனவே அறியப்பட்ட தகவலாகும். எட்ஜ் 70 மேக்ஸ் மாடல் ஆனது 90W வயர்டு சார்ஜிங் மற்றும் 25W மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெப்பத்தை குறைத்து சீராக வைத்திருக்க, இந்த ஸ்மார்ட்போனில் 5,500mm² அளவுள்ள 'வேப்பர் சேம்பர்' (vapor chamber) கூலிங் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.
என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.44,999 - ரூ.54,999 என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலை விவரங்கள், விற்பனை சலுகைகள் மற்றும் விற்பனை தேதி ஆனது அறிமுக நாளான ஜூலை 15 இல் அறிவிக்கப்படும்.
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் விலை: மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.47,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சிக்கரி காபி, ஜின்ஃபாண்டெல் மற்றும் ஸ்டார்மி சீ ஆகிய மூன்று பேன்டோன் கலர்களில் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 5,200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.8-இன்ச் 1.5K எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்ப்ளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் சிப்செட், LPDDR5X ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ்
- வெப்பத்தை வெளியேற்றுவதற்காக இந்த ஃபோனில் 4600mm2 வேப்பர் சேம்பரும் உள்ளது
- 50எம்பி குவாட்-கேமரா செட்டப்
- 50MP சோனி LYT-710 ப்ரைமரி சென்சார்
- ஆட்டோஃபோகஸ் வசதியுடன் கூடிய 50MP அல்ட்ரா-வைட் கேமரா
- 3.5x ஆப்டிகல் ஜூம் வழங்கும் 50MP பெரிஸ்கோப் லென்ஸ்
- ஆட்டோஃபோகஸ் ஆதரவுடன் கூடிய 50MP செல்பீ கேமரா
- AI மூலம் இயங்கும் 50x வரையிலான சூப்பர் ஜூம் ப்ரோ ஆதரவு
- அனைத்து லென்ஸ்களிலிருந்தும் 60 fps வேகத்தில் 4K வீடியோ பதிவு
- வீடியோ HDR, ஆட்டோ மேக்ரோ விஷன் மற்றும் AI மூலம் மேம்படுத்தப்பட்ட லோ லைட் ஷூட்டிங் ஆதரவு
- 6,500mAh பேட்டரி, 90W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், 3 ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் 5 வருட செக்யூரிட்டி பேட்ச்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
- தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட பல AI அம்சங்களுடன், ஒரு க்ளீன் ஆன மற்றும் கிட்டத்தட்ட ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்கும்
- IP68 மற்றும் IP69 ரேட்டிங் மற்றும் MIL-810H இராணுவத் தர சான்றிதழ்
- டால்பி அட்மாஸ், ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ ஆதரவு


Click it and Unblock the Notifications