Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. 37 சதவீத ஆஃபரில் 7100mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) என்னும் சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் (Motorola Edge 70 Max) தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. 7100mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா போன்ற பீச்சர்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.5,850 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.54,149 விலைக்கு இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. 37 சதவீத ஆஃபரில் 7100mAh பேட்டரி.. மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் அம்சங்கள் (Motorola Edge 70 Max Specifications): 6.8 இன்ச் (1440 x 3168 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதில் 2K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 7000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகிய பீச்சர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் வழங்கப்பட்டுள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) பிராசஸருடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. கிராபிக்ஸ் அவுட்புட் கொடுக்க அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கிறது.

3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. கேமராவை பொறுத்தவரை, சோனி லைட்டியா 710 (Sony LYTIA 710) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா இடம்பெற்றுள்ளது. இதனுடன் ஷேக்காகாமல் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க ஓஐஎஸ் (OIS) தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், மேக்ரோ போட்டோக்களை எடுப்பதற்கான ஆப்ஷனும் இந்த ரியர் கேமரா செட்டப்பில் உள்ளது. ஆகவே, இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் இருக்கும்.

செல்பீ எடுப்பது மற்றும் வீடியோ கால் செய்வதற்கு 32 எம்பி ஃப்ரன்ட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். ஆடியோ பக்கம் பார்க்கையில், டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு ஆகிய அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரியை பொறுத்தவரை, இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் 7100mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதை விரைவாக சார்ஜ் செய்ய 90W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 25W மேக்னட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் (Magnetic Wireless Charging) வசதியும் இடம்பெற்றுள்ளது. ஆகவே, பேக்கப் பக்காவாக இருக்கும்.

இந்த போன் 8.29 மிமீ தடிமன் மற்றும் 221 கிராம் எடையைக் கொண்டுள்ளது. உறுதியான கட்டமைப்புக்காக மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, MIL-STD-810H சர்டிபிகேஷன் இடம்பெற்றுள்ளது. மேலும், வாட்டர் மற்றும் டஸ்ட் புரொடெக்சன் கொடுக்க IP68 மற்றும் IP69 ரேட்டிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Max Gets Discount on Flipkart Big Billion Days 2026 Sale Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X