அடி ஆத்தி.. இம்புட்டு விலையா? அறிமுகமானது புது Motorola 5ஜி போன்.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) ஸ்மார்ட்போனை இன்று உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும். இப்போது இந்த புதிய மோட்டோரோலா போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (Motorola Edge 70 Specifications): 6.7 இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 2712 x 1220 பிக்சல்கள்,120Hz ரெஃப்ரெஷ் ரேட் ,4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.
50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இந்த ரியர் கேமரா ஆனது 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த புதிய மோட்டோ போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த மெலிதான மோட்டோ போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா போன்.
மோட்டோரோலா எட்ஜ் 70 போனில் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் 5.99 எம்எம் தடிமன் 159 கிராம் எடை கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.

4800mAh பேட்டரி மோட்டோரோலா எட்ஜ் 70 போனில் உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
பேன்டோன் லில்லி பேட் (Pantone Lily Pad), பேன்டோன் கேஜெட் கிரே (Pantone Gadget Gray), பேன்டோன் பிராஞ்ச் கிரீன் (Pantone Bronze Green) நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம் விலை 799 Euros (இந்திய மதிப்பில் ரூ.81,310)-ஆக உள்ளது. இங்கிலாந்தில் தற்போது இந்த போன் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








