தம்பி ஐபோன் ஏர் கொஞ்சம் ஓரம்போ.. ஸ்லிம் டிசைனில் வருகிறது புதிய Motorola போன்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
சமீபத்தில் ஸ்லிம் டிசைனில் ஐபோன் ஏர் மாடலை அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போன் மெல்லிய வடிவமைப்புடன் மேம்பட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்தது. இந்நிலையில் ஐபோன் ஏர் மாடலுக்கு போட்டி கொடுக்கும் வகையில் மோட்டோரோலா நிறுவனமும் ஒரு மெல்லிய வடிவமைப்பு கொண்ட போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது வரும் நவம்பர் 5-ம் தேதி உலக சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். இந்த போன் மெல்லிய வடிவமைப்பு மற்றும் தனித்துவமான பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகளைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (Motorola Edge 70 specifications): 6மிமீ-க்கு குறைவான தடிமன் கொண்டதாக இருக்கும் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன். மேலும் ஏற்கனவே வெளியான ஐபோன் ஏர் மாடல் ஆனது 5.6மிமீ தடிமன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த மோட்டோரோலா போன் மெலிதான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் ஐபோன் ஏர் மாடல் ஆனது 3149mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்தது. ஆனால் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் ஆனது 4800mAh பேட்டரி உடன் அறிமுகமாகும். எனவே இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.
குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 70 போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும். எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய மோட்டோரோலா போனின் வடிவமைப்பு மற்றும் பேட்டரி பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமராவுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய மோட்டோரோலா போனில் உள்ளன.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor)வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு தரமான டால்பி அட்மாஸ் ஆடியோ வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

பேன்டோன் லில்லி பேட் (Pantone Lily Pad), பேன்டோன் கேஜெட் கிரே (Pantone Gadget Gray), பேன்டோன் பிராஞ்ச் கிரீன் (Pantone Bronze Green) நிறங்களில் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேம்பட்ட AI அம்சங்கள் இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் உள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








