புது போன் வாங்கபோறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! ஸ்லிம் டிசைனில் வருகிறது புது Motorola போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே சீனா மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது தற்போது இந்த இந்திய போனின் அறிமுக தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
அதாவது தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, வரும் டிசம்பர் 15-ம் தேதி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மெல்லிய வடிவமைப்புடன் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (Motorola Edge 70 Specifications): 6.7 இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 2712 x 1220 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த மெலிதான மோட்டோரோலா போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா போன்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கொண்டுள்ளது
மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.
ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் மோட்டோரோலா எட்ஜ் 70 போனில் உள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் 5.99 எம்எம் தடிமன், 159 கிராம் எடை கொண்டுள்ளது.
உலக சந்தையில் 4800mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 போன் அறிமுகமானது. ஆனால் இந்தியாவில் இதை விட சற்று பெரிய பேட்டரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 5500mAh முதல் 7000mAh பேட்டரி வரை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

குறிப்பாக 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
அதுவும் இந்த போன் பேன்டோன் லில்லி பேட் (Pantone Lily Pad), பேன்டோன் கேஜெட் கிரே (Pantone Gadget Gray), பேன்டோன் பிராஞ்ச் கிரீன் (Pantone Bronze Green) நிறங்களில் வாங்க கிடைக்கும். அதேபோல் இந்த போன் ரூ.35,000-க்குள் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








