Home
Mobile

ஜஸ்ட் 5.99 மிமீ.. பென்சிலை விட ஸ்லிம் ஆன புது Motorola 5G போன்.. கனவில் கூட நினைக்காத கம்மி விலையில்!

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் கடந்த மாதம் (2025 நவம்பர்) அதன் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக - மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) மாடலை உலகளவில் அறிமுகம் செய்திருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில் (Flipkart) மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் லேண்டிங் பேஜ் (Landing Page) நேரலைக்கு வந்துள்ளது. ஆக இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமான பின்னர் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஜஸ்ட் 5.99 மிமீ.. பென்சிலை விட ஸ்லிம் ஆன புது Motorola 5G போன்!

பிளிப்கார்ட்டில் உள்ள அதிகாரப்பூர்வ டீஸர்கள் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை உறுதிப்படுத்தியுள்ளன. இது 5.99 மிமீ ஸ்லிம் பாடி உடன் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பென்சிலை விட மெல்லிய வடிவமைப்பு ஆகும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3 கலர்களில் - கேஜெட் கிரே, லில்லி பேட் மற்றும் ப்ரான்ஸ் க்ரீன் - வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எப்போது அறிமுகம்? என்ன விலைக்கு வரலாம்? இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஒரு லேட்டஸ்ட் லீக் மோட்டோரோலா நிறுவனம் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யக்கூடும் என்கிறது

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஆனது 4,800mAh பேட்டரியை கொண்டிருந்தாலும், இந்தியாவில் அறிமுகமாகும் மாடலில் பெரிய பேட்டரி இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை, இது ரூ.35,000 க்கும் குறைவான விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான அம்சங்கள் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட்டில் உள்ளதை போலவே இருக்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 க்ளோபல் வேரியண்ட்டின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 6.7-இன்ச் P-OLED 1.5K டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்
- 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ்
- டூயல் 50 மெகாபிக்சல் கேமராக்கள்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 68W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்

மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ராவும் வருது: ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸின் ஒரு சமீபத்திய அறிக்கை மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போனும் விரைவில் அறிமுகமாகும் என்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் டெக்ஸ்ச்சர்டு ஃபினிஷ் இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியது

இது கடந்த 2024 இல் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ராவுடன் ஒப்பிடும்போது ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. மேலும் முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்ட ஈகோ லெதரில் இருந்து வித்தியாசமாகவும் தெரிகிறது. புதிய அல்ட்ரா மாடலின் கேமரா ஐலேன்ட் ஆனது 3 லென்ஸ்களுடன் மேல்-இடது மூலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அதில் ப்ரைமரி, அல்ட்ராவைடு மற்றும் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராக்கள் இடம்பெறலாம். ஸ்மார்ட்போனின் ஃபிரேம் ஆனது மெட்டலால் ஆனதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலது பக்கத்தில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் இருக்கிறது. இடது பக்கத்தில் ஏஐ தொடர்பான செயல்பாடுகளுக்கான ஒரு பிரத்யேக கீ உள்ளது.

எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? மோட்டோரோலா எட்ஜ் 70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம். இந்தியாவிற்கு வரும் போது இதன் விலை நிர்ணயம் ரூ.90,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்கலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.89,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 India Launch Confirmed Expected to Launch in December 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X