நவம்பர் 5 சம்பவம் இருக்கு.. ஸ்லிம் டிசைனில் வரும் புதிய Motorola போன்.. எந்த மாடல்? என்னென்ன அம்சங்கள்?
மோட்டோரோலா நிறுவனம் நவம்பர் 5-ம் தேதி மோட்டோரோலா எட்ஜ் 70 (motorola edge 70) ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் ஐரோப்பாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 70 போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் படங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (motorola edge 70 Specifications): 6மிமீ-க்கு குறைவான தடிமன் கொண்டதாக இருக்கும் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 170 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இந்த மோட்டோரோலா போனில் உள்ளன.

6.67-இன்ச் 1.5கே 10-பிட் பிஒஎவ்இடி (1.5K 10-bit pOLED) டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Qualcomm Snapdragon 7 Gen 4) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos)உள்ளிட்ட பல அம்சங்கள் மோட்டோரோலா எட்ஜ் 70 போனில் உள்ளன. மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இந்த புதிய மோட்டோரோலா வெளிவரும் என்று கூறப்படுகிறது.
கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த போனின வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளன. மேலும் இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
4800mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் வெளியாகும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. அதேபோல் 5ஜி, டூயவ் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த மெலிதான வடிவமைப்பைக் கொண்ட போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








