முரட்டு மோட்டோ.. 7000mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5 கலர்களில் எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலோ எட்ஜ் 70 ப்யூஷன் (Motorola Edge 70 Fusion) ஸ்மார்ட்போனின் கலர் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே, மூன்று கலர்களில் கிடைக்க இருப்பது தெரியவந்தது, இப்போது, மேலும் 2 கலர்களில் கிடைக்க இருப்பது தெரிய வந்துள்ளது. பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங், கேமரா மற்றும் டிஸ்பிளே போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களும் மிரளவிடும்படி கிடைக்கின்றன.
மோட்டோரோலோ எட்ஜ் 70 ப்யூஷன் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப முழு பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்கள் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துவிட்டன. இப்போது, டிசைன் மற்றும் கலர் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ப்ளூ சர்ஃப் (Blue Surf), கண்ட்ரி ஏர் (Country Air), ஓரியண்ட் ப்ளூ (Orient Blue), ஸ்போர்டிங் கிரீன் (Sporting Green) கலர்கள் உள்ளது.

மேலும், சில்ஹவுட் (Silhouette) உள்பட மொத்தமாக 5 கலர்களில் இந்த மோட்டோரோலோ எட்ஜ் 70 ப்யூஷன் ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் வீகன் லெதர் பேனல் கொண்ட மாடலாகவும் இருக்கிறது. குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Curved Display) மற்றும் மெட்டாலிக் மிடில் ஃபிரேம் (Metalic Middle Frame) ஆகிய டிசைனை பார்க்க முடிகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 70 Fusion Specifications): 6.78 இன்ச் குவாட் கர்வ்ட் அமோலெட் (Quad Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை கொடுத்துள்ளது.
12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Snapdragon 7s Gen 3) சிப்செட்டை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்யூஷன் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைத்துள்ளது. சோனி எல்ஒய்டி (Sony LYT) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உள்ளது.
மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. அல்ட்ரா வைடு கேமராவை எதிர்பார்க்கலாம். 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பெரிய 7000mAh பேட்டரியை கொடுத்து உள்ளது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்யூஷன் ஸ்மார்ட்போனில் கிடைத்துள்ளது.
எம்ஐஎல்-எஸ்டிடி 810எச் (MIL-STD 810H) மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் கொண்டு உள்ளது. இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. இந்த பீச்சர்களுடன் ரூ.43,000 பட்ஜெட்டில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டிலும் மோட்டோரோலோ எட்ஜ் 70 ப்யூஷன் மாடலை எதிர்பார்க்கலாம்.
ஏனென்றால், மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூஷன் (Motorola Edge 60 Fusion) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாகி உள்ளது. 5500mAh பேட்டரி, டைமன்சிட்டி 7400 சிப்செட்டை கொடுத்துள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. ஆகவே, வர இருக்கும் மோட்டோரோலோ எட்ஜ் 70 ப்யூஷன் மாடலை இதைவிட கூடுதல் பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








