இது வந்தா.. மத்தது காலி.. 7000mAh பேட்டரி.. 50MP SONY கேமரா.. 144Hz டிஸ்பிளே.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்யூஷன் (Motorola Edge 70 Fusion) மாடல் வெளியாக இருப்பதை தொடர்ந்து, கேமரா, டிசைன், டிஸ்பிளே மற்றும் பேட்டரி பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. கர்வ்ட் டிஸ்பிளேவில், சோனி சென்சார் கேமரா சிஸ்டம் கொடுத்துள்ளது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்யூஷன் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. இதில் முதலாவது மாடலாக மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதை மோட்டோரோலா நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், முக்கிய பீச்சர்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளன.

பிரீமியம் லெதர் பினிஷிங் கொண்ட பான்டோன் சில்லவுட் (Pantone Silhouette), பான்டோன் ப்ளூ சர்ஃப் (Pantone Blue Surf) மற்றும் பான்டோன் கன்ட்ரி ஏர் (Pantone Country Air) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. எட்ஜ் மாடலாக இருப்பதால், 3டி கர்வ்ட் டிஸ்பிளேவை (3D Curved Display) கொடுத்து உள்ளது. மார்ச் மாதத்தில் இந்திய மார்கெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்யூஷன் (Motorola Edge 70 Fusion Specifications): 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு சோனி எல்ஒய்டி 710 (Sony LYT 710) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சென்சாருடன் கிடைக்கும் முதல் மாடலாகவும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் இருக்கிறது.
மேலும், மேக்ரோ ஆப்ஷன், 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Curved Display) கொடுக்கப்பட்டு உள்ளது. 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது. மோட்டோவில் எட்ஜ் மாடலாக இருந்தும் 7000mAh பேட்டரியை கொடுக்கிறது.
இந்த பேட்டரிக்கு 68W டர்போ சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 7.99 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளன. இப்போது, ஏற்கனவே மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Octa Core Snapdragon 7s Gen 3) சிப்செட்டை கொடுத்துள்ளது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரியை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்யூஷன் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. எம்ஐஎல் எஸ்டிடி 810 (MIL STD 810) சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
மேலும், டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி சார்ஜிங் உள்ளது. இந்திய மார்கெட்டில் ரூ.43,000 பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








