வாடா செல்லம்.. இந்தியாவே வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 12ஜிபி ரேம்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் (Motorola Edge 70 Fusion) விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த போனின் சிப்செட் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 70 Fusion Specifications): தற்போது வெளியான தகவலின்படி, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 7s Gen 4 chipset) உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தைக் கொடுக்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
6.78-இன்ச் ஃபுல் HD பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் 10 பிளஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் நான்கு ஆண்டுகளுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகள் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த போன் வெளிவரும்.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த மோட்டோரோலா போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன் இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. ப்ளூ சர்ஃப் (Blue Surf), ஓரியண்ட் ப்ளூ (Orient Blue) மற்றும் ஸ்போர்டிங் கிரீன் (Sporting Green) நிறங்களில் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் அறிமுகமாகும்.
7000mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் போன் வெளிவரும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802 11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் சற்று உயர்வான விலையில் வெளியாகும்.
Image Credit: X/ @evleaks,


Click it and Unblock the Notifications








