Home
Mobile

முரட்டு பீஸ்.. 7000mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. புது Motorola போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனத்தின் அடுத்த எட்ஜ் மாடலான மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் (Motorola Edge 70 Fusion) ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் கசிந்துள்ளன. 144 Hz ஓஎல்இடி டிஸ்பிளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட், 7000mAh பேட்டரி, 68W டர்போ சார்ஜிங், சோனி சென்சார் கேமரா போன்ற பீச்சர்களை கொண்டுள்ளது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போன் மாடலாக மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ரூ.29,999 பட்ஜெட்டில் 5.99 எம்எம் ஸ்லிம் பாடி கொடுத்து நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இப்போது, அடுத்த மாடலுக்கு மோட்டோரோலா நிறுவனம் தயாராகிவிட்டது. மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் மாடலை களமிறக்க இருக்கிறது.

முரட்டு பீஸ்.. 7000mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. மாடல்?

ஆனால், இதில் பெரிய பேட்டரி கிடைக்க உள்ளது. ஆகவே, ஸ்லிம் பாடி எதிர்பார்க்க முடியாது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களும் டிப்ஸ்டர் Evan Blass எக்ஸ் தளம் வழியாக கசிந்துள்ளன. இந்த மாடலிலும் ஸ்னாப்டிராகன் சிப்செட் கிடைக்க இருக்கிறது. முழு பீச்சர்களை பார்க்கையில் ஆல்-ரவுண்ட் மாடலாக இருப்பது தெரிகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 70 Fusion Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட்டை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கிறது.

3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க உள்ளது. 6.78 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க உள்ளது. 1.5K ரெசொலூஷன், 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த டிஸ்பிளேவில் கிடைக்கிறது.

மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி (Sony LYT) சென்சார் கிடைக்க இருக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட உள்ளது. 7000mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங்கை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் கொடுக்க உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கொடுக்க MIL STD-810H சர்டிபிகேஷன் கொண்டுள்ளது. மேலும், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உள்ளது.

ஓரியண்ட் ப்ளூ, ஸ்போர்ட்டிங் கிரீன், ப்ளூ சர்ஃப், கண்ட்ரி ஏர், சில்ஹவுட் ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. குளோபல் மார்கெட்டில் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. பிறகு இந்தியாவில் எதிர்பார்க்கலாம். மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999ஆக இருப்பதால், இந்த ஃப்யூஷன் மாடலை கிட்டத்தட்ட இதே பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Fusion Snapdragon 7s Gen 3 Chip 7000mAh Battery Expected To Launch April 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X