சத்தமில்லாமல் அறிமுகமானது புது Motorola 5ஜி போன்.. IP69 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் 7000mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் பிளஸ் (Motorola Edge 70 Fusion) ஸ்மார்ட்போனை சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் 5200mAh பேட்டரி உடன் தற்போது மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் பிளஸ் (Motorola Edge 70 Fusion Plus) எனும் ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா.
குறிப்பாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் பிளஸ் பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் பிளஸ் போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் பிளஸ் அம்சங்கள் (Motorola Edge 70 Fusion Plus Specifications): 6.8 இன்ச் சூப்பர் எச்டி அமோலெட் டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 1,272×2,772 பிக்சல்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் சிப்செட் (Qualcomm's Snapdragon 7s Gen 4 chipset ) கொண்டுள்ளது புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் பிளஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
50 எம்பி மெயின் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த போனில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் ரூ வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. 5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 6.0, வைஃபை 6இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

5200mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் 177 கிராம் ஆகும். பான்டோன் ஓரியண் ப்ளூ, பான்டோன் ப்ளூ சர்ப் நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் பிளஸ் போனின் விலை BRL 2,969 (இந்திய மதிப்பில் ரூ.52,900)-ஆக உள்ளது. தற்போது இந்த போன் பிரேசிலில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








