Home
Mobile

கொஞ்சம் பொறுங்க.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் (Motorola Edge 70 Fusion) ஸ்மார்ட்போன் தற்போது பிரத்யேக பிளிப்கார்ட் மைக்ரோசைட் நேரலைக்கு வந்துள்ளது. அதுவும் இந்த புதிய போன் வரும் பிப்ரவரி 26-ம் தேதி இந்தியாவில் அறிமுகாகும் என்று தகவல் கசிந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய போன். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

பான்டோன் ப்ளூ சர்ஃப் (டர்க்கைஸ்), பான்டோன் கண்ட்ரி ஏர், பான்டோன் சில்ஹவுட் நிறங்களில் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

கொஞ்சம் பொறுங்க.. வருகிறது புது Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 70 Fusion Specifications): மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் ஃபுல் HD பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் 10 பிளஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 7s Gen 4 chipset) உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தைக் கொடுக்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் +256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் நான்கு ஆண்டுகளுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதுவும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகள் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த போன் வெளிவரும்.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

கொஞ்சம் பொறுங்க.. வருகிறது புது Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த மோட்டோரோலா போன் அறிமுகமாகும். இந்த போன் இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் போன் 7000mAh பேட்டரி உடன் வெளிவரும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802 11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

photo credits: Motorola, Flipkart

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Fusion India Launch Date Leaked Online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X