ஆரம்பமே சூப்பர் ஆஃபர்.. இன்று விற்பனைக்கு வரும் புது Motorola 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?
மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் (Motorola Edge 70 Fusion) ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் மதியம் 12 மணி அளவில் வாங்க முடியும். இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் அம்சங்கள்(Motorola Edge 70 Fusion Specifications): குவாட் கர்வ்ட் டிசைனில் 6.78 இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i), 2772 x 1272 பிக்சல்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் கொண்டுள்ளது புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் 3 ஜெனரேஷ் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த போனில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் ரூ வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் MIL STD-810H சர்டிபிகேஷன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) போன்ற சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளியாகி உள்ளது.

7000mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் 193 கிராம் ஆகும். பான்டோன் ப்ளூ சர்ப் (PANTONE Blue Surf), பான்டோன் கன்ட்ரி ஏர் (PANTONE Country Air) மற்றும் பான்டோன் சில்லவுட் (PANTONE Silhouette) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் போனின் விலை ரூ.26999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.29,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.32,999 விலையிலும் வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.24,999 விலையில் வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








