விவோ எல்லாம் ஓரம் போ.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் (Motorola Edge 70 Fusion) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். அதாவது இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் படங்களை வெளியிட்டுள்ளார் டிப்ஸ்டர் இவான் பிளாஸ். குறிப்பாக இந்த போன் ட்ரிப்ளி ரியர் கேமராக்கள் மற்றும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 70 Fusion Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் 10 பிளஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset) உடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும். குறிப்பாக இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
குறிப்பாக 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் மறறும் 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதேபோல் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் நான்கு ஆண்டுகளுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகள் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த போன் வெளிவரும்.

இந்த புது மோட்டோரோலா போன் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன் இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் 7000mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் போன் வெளிவரும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802 11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதுவும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ போன்களுக்கு போட்டியாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் வெளிவர உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும்.
photo credits: YTECHB.com


Click it and Unblock the Notifications








