Home
Mobile

முடிச்சு விட்டான் Motorola.. 7000mAh பேட்டரி, 50MP Sony கேமரா, 144Hz கர்வ்டு டிஸ்பிளேவுடன் புது போன்!

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் அதன் அடுத்த ஸ்மார்ட்போன் ஆன மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் (Motorola Edge 70 Fusion) மாடலின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த சிறிது நேரத்திலேயே, பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

இருப்பினும் இந்தியாவில் எட்ஜ் 70 ஃப்யூஷனுக்கான சரியான வெளியீட்டு தேதியை மோட்டோரோலா நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால் இது 2026 மார்ச் மாத தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி இது என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கலாம்? என்ன விலைக்கு வரலாம்? இதோ விவரங்கள்:

Motorola.. 7000mAh பேட்டரி, 50MP Sony கேமரா.. புது போன்!

அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட (உறுதிப்படுத்தப்பட்ட) அம்சங்களை பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ஆனது கேமரா மற்றும் டிஸ்பிளே மேம்பாடுகளுக்கு வலுவான முக்கியத்துவத்தை பெறுகிறது. இது 50எம்பி சோனி LYT-710 ப்ரைமரி சென்சாரை பேக் செய்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் கூற்றுப்படி - இது அல்ட்ரா-கிளியர் லோ-லைட் போட்டோக்கள், வீடியோக்களில் மேம்படுத்தப்பட்ட ஹைலைட் கண்ட்ரோல் மற்றும் பான்டோன்-சரிபார்க்கப்பட்ட வண்ணங்கள் மற்றும் ஸ்கின் டோன்களை கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்று கூறுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் ப்ரைமரி கேமராவானது 13எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது மேக்ரோ மற்றும் டெப்த் கேமராவாகவும் செயல்படும்.,முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. குறிப்பாக, அனைத்து கேமராக்களும் 4கே வீடியோ பதிவை ஆதரிக்கின்றன. மோட்டோரோலா ஏஐ ஆனது போட்டோ என்ஹான்ஸ்மென்ட் மற்றும் அடாப்டிவ் வீடியோ ஸ்டெபிலைசேஷன் உள்ளிட்ட மோட்டோ ஏஐ அம்சங்களையும் தொகுக்கும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உடனான 1.5கே குவாட்-கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 5200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் HDR10+ ஆதரவையும் கொண்டுள்ளது. எல்லாவற்றை விட முக்கியமான இது மிகப்பெரிய 7,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போனை 52 மணிநேரம் வரை பயன்படுத்தலாம் . இது 68W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது

இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தபோதிலும், மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்லிம் ஆன 7.99மிமீ ப்ரொபைலை (டிசைனை) பராமரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சில்ஹவுட், ப்ளூ சர்ஃப் மற்றும் கன்ட்ரி ஏர் போன்ற பான்டோன்-க்யூரேட்டட் ஷேட்களில் அறிமுகம் செய்யப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே லெதர்-இன்ஸ்பையர்டு பேக் பேனல்களை கொண்டுள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷனுடன் ஒப்பிடும்போது, ​இந்த ​புதிய மாடல், குறிப்பாக பேட்டரி திறன், பீக் ப்ரைட்னஸ் மற்றும் இமேஜிங் ஹார்ட்வேர் ஆகியவற்றில் அதன் "எல்லைகளை" மேலும் தள்ளுவதாக தெரிகிறது. எட்ஜ் 60 ஃபியூஷன் ஆனது ஏற்கனவே நடுத்தர பட்ஜெட் பிரிவில் கர்வ்டு டிஸ்பிளே மற்றும் திறமையான கேமராக்களை வழங்கியிருந்தாலும், எட்ஜ் 70 ஃபியூஷன், இன்னும் மேம்பட்ட சென்சார், பெரிய பேட்டரி மற்றும் விரிவாக்கப்பட்ட ஏஐ திறன்களுடன் வருகிறது.

இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட விவரங்களின் அடிப்படையில், நீண்ட பேட்டரி லைஃப் மற்றும் கேமரா செயல்திறனை முன்னுரிமைப்படுத்துபவர்களுக்கு, குறிப்பாக நிறைய வீடியோ கன்டென்ட்களை பயன்படுத்துபவர்களுக்கு அல்லது மாறுபட்ட லைட்டிங் நிலைகளில் அடிக்கடி படமெடுப்பவர்களுக்கு எட்ஜ் 70 ஃபியூஷன் ஒரு கட்டாய விருப்பத்தை உருவாக்கும்.

இருப்பினும், அதிவேக சார்ஜிங் வேகம் அல்லது மேம்பட்ட டெலிஃபோட்டோ ஜூம் திறன்கள் முக்கிய பரிசீலனைகளாக இருந்தால், முடிவெடுப்பதற்கு முன் இதே விலைப்பிரிவில் உள்ள, மற்ற ஆப்ஷன்களை (மற்ற ஸ்மார்ட்போன்களை) மதிப்பீடு செய்வது நல்லது. விலையை பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஆனது இந்தியாவில் ரூ.20,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் ஸ்மார்ட்போன் துறையில் அதிகரித்து வரும் விலை நிர்ணயங்களை கருத்தில் கொண்டால், மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷம் ஸ்மார்ட்போன் ஆனது நிச்சயம் சற்று அதிக விலை பிரிவில் அமரக்கூடும். நிச்சயமாக ரூ.25.000 க்கு மேலாக செல்லலாம். மோட்டோரோலா நிறுவனம் வருகிற மார்ச் 2 ஆம் தேதி அன்று, இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் விவரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த போன் விரைவில் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Fusion 50MP Sony LYT 710 Camera 144Hz display 7000mAh battery Confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X