Apple-ஆவது.. Samsung-ஆவது.. 6 மிமீ-க்குள் புது Motorola போன்.. சகல பீச்சர்களும் தெரிஞ்சு போச்சு.. எந்த மாடல்?
ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) நிறுவனங்களின் அல்ட்ரா ஸ்லிம் மாடல்களை தூக்கி சாப்பிடும்படி மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா 70 எட்ஜ் (Motorola Edge 70) ஸ்மார்ட்போன் களமிறங்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதியானதை அடுத்து மொத்த பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. இந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ஸ்லிம் டிசைன் கொண்ட மாடல்களில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களே பட்டையை கிளப்பி வருகின்றன. ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) மாடலானது 5.64 மிமீ தடிமனில் வெளியாகியது. அதேபோல சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge) மாடலானது 5.8 மிமீ தடிமனில் களமிறங்கியது.

ஆனால், இந்த மாடல்களில் பேட்டரி பேக்கப் பெரிதாக கிடையாது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடலில் 3900mAh பேட்டரி கிடைத்தது. அதேபோல ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போனில் 27 மணி நேர வீடியோ பிளே பேக் கிடைத்தது. ஆனால், மோட்டோரோலா 70 எட்ஜ் மாடலானது, 6 மிமீ தடிமனில் கிடைத்தாலும், 4800mAh பேட்டரியை கொடுக்க இருக்கிறது.
அதேபோல அந்த நிறுவனங்களின் பட்ஜெட்டைவிட பாதிக்குப்பாதி விலையைவிடவும் மலிவான விலைக்கு இது கிடைக்க இருக்கிறது. நவம்பர் 5ஆம் தேதி குளோபல் மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து சீனா, இந்தியா உள்ளிட்ட மார்கெட்களில் எதிர்பார்க்காலம். இப்போது, முழு பீச்சர்களையும், பட்ஜெட்டையும் தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (Motorola Edge 70 Specifications): இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க இருக்கிறது.

மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Qualcomm Snapdragon 7 Gen 4) சிப்செட் கொடுக்கப்பட இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனை தூக்கி சாப்பிடும்படி 4800mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. ஆகவே, அதைவிட கூடுதலாக பேக்கப் கிடைக்க இருக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் பட்டையை கிளப்புகிறது.
ஏனென்றால், 68W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (Wired Fast Charging) மட்டுமல்லாமல் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (Wireless Fast Charging) கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்க இருக்கிறது.
மோட்டோ ஏஐ (Moto AI) பீச்சர்களை கொடுக்கும்படி ஹலோ யுஐ (Hello UI) கிடைக்க இருக்கிறது. ஆப்பிள், சாம்சங் மாடல்களை போலவே நானோ சிம் சிலாட் மட்டுமல்லாமல், ஈசிம் (eSIM) சப்போர்ட் கொடுக்க இருக்கிறது. மேலும், வழக்கமான என்எப்சி (NFC), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS) மற்றும் யுஎஸ்பி-சி (USB-C) போர்ட் கிடைக்க இருக்கிறது.
பான்டோன் ப்ரோன்ஸ் கிரீன் (Pantone Bronze Green) கலரில் கிடைக்க இருக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் விலை ரூ.26,999 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஏற்கனவே இந்தியாவில் வெளியான மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,999 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, இதையும் பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications