ஒட்டுமொத்த மார்க்கெட்டும் திணறப்போகுது.. 50எம்பி கேமரா.. 68W சார்ஜிங்.. ஆண்ட்ராய்டு 16 OS.. எந்த மாடல்?
சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எக்ஸ்70 ஏர் (Moto X70 Air) ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் உலக நாடுகளிலும், இந்தியாவிலும் மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த போனின் நிறங்கள், விவரங்குறிப்புகள், விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
பேன்டோன் பிராஞ்ச் கிரீன் (Pantone Bronze Green), பேன்டோன் லில்லி பேட் (Pantone Lily Pad) நிறங்களில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதுவும் 5.99 எம்எம் தடிமன் மற்றும் 159 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன்.

மோட்டோரோலா எட்ஜ் 70 அம்சங்கள் (Motorola Edge 70 Specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.
அதேபோல் 6.7 இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 2712 x 1220 பிக்சல்கள்,120Hz ரெஃப்ரெஷ் ரேட் ,4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இந்த ரியர் கேமரா ஆனது 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த புதிய மோட்டோ போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
அதுவும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த மெலிதான மோட்டோ போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா போன்.
மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன். மேலும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) ராணுவ தரத்திலான குவாலிட்டியும் கொண்டுள்ளது இந்த புதிய போன்.
மோட்டோரோலா எட்ஜ் 70 போனில் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது.
குறிப்பாக 4800mAh பேட்டரி மோட்டோரோலா எட்ஜ் 70 போனில் உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் ரூ.30,000-க்கு கீழ் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








