Home
Mobile

மே.8 குறிச்சாச்சு.. இந்த சீரிஸ்-க்கு லிமிட் இல்ல.. மோட்டோரோலா எட்ஜ் 60எஸ் மாடல் ரெடி.. பீச்சர்கள் எப்படி?

மோட்டோரோலா நிறுவனம் அதனுடைய மோட்டோரோலோ எட்ஜ் 60 சீரிஸில் (Motorola Edge 60 Series) ஏகப்பட்ட மாடல்களை களமிறக்கி வருகிறது. ஏற்கனவே, மோட்டோரோலோ எட்ஜ் 60, மோட்டோரோலோ எட்ஜ் 60 ஸ்டைலஸ், மோட்டோரோலோ எட்ஜ் 60 ப்யூஷன், மோட்டோரோலோ எட்ஜ் 60 ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் மோட்டோரோலோ எட்ஜ் 60 அல்ட்ரா மாடலானது வெளியாக இருக்கிறது. இப்போது, மோட்டோரோலா எட்ஜ் 60எஸ் மாடலின் வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளது. இதுகுறிக்க விவரங்களை இப்போது பார்க்கலாம்.

குளோபல் மார்கெட்டில் மோட்டோரோலோ எட்ஜ் 60 சீரிஸ் மற்றும் மோட்டோரோலா ரேசர் 60 சிரீஸ் (Motorola Razr 60 Series) ஏற்கனவே வெளியாகிவிட்டது. ரேசர் சீரிஸில் மோட்டோரோலா ரேசர் 60 (Motorola Razr 60) மற்றும் மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா (Motorola Razr 60 Ultra) மாடல்கள் வெளியாகின. இந்தியாவிலும் இந்த மாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

மே.8 குறிச்சாச்சு.. இந்த சீரிஸ்-க்கு லிமிட் இல்ல.. எட்ஜ் 60எஸ் ரெடி!

ஏற்கனவே, மோட்டோரோலோ எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 Stylus), மோட்டோரோலோ எட்ஜ் 60 ப்யூஷன் (Motorola Edge 60 Fusion), மோட்டோரோலோ எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro) ஆகிய மாடல்கள் இந்தியாவில் வெளியாகிவிட்டன. மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா ஓரிரு வாரங்களில் வெளியாக இருக்கிறது. இதை மோட்டோரோலா இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்த நேரத்தில் பட்ஜெட் செக்மெண்ட்டில் மோட்டோரோலா எட்ஜ் 60எஸ் (Motorola Edge 60s) மாடல் வெளியாக இருப்பதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால், இது வழக்கம்போல சீன மார்கெட்டில் முதலில் வெளியாக இருக்கிறது. அதன்பிறகு மற்ற மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். இந்த போனின் வெளியீட்டு தேதி எப்போது?

மே 8ஆம் தேதி சீன மார்கெட்டில் இந்த போன் வெளியாக இருக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 60எஸ் போனில் எதிர்பார்க்கப்படும் பீச்சர்களை (Motorola Edge 60s Specifications) முதலில் தெரிந்து கொள்வோம். அதன்பிறகு விலை எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். மோட்டோவில் வழக்கமாக கிடைக்கும் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது.

6.7 இன்ச் பேனல், 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வர இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆக்டா கோர் டைமன்சிட்டி 7400 (Octa Core Dimensity 7400) சிப்செட் கிடைக்க இருக்கிறது. இந்த மோட்டோரோலோ எட்ஜ் 60எஸ் போனில் 5,500mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இதில் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வர இருக்கிறது.

மேலும், 32 எம்பி செல்பீ ஷூட்டர் வர இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 60 சீரிஸ்களில் அதிகமாக கிடைக்கும் சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சாருடன் மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. இந்த 50 எம்பி மெயின் கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா சப்போர்ட் உள்ளது.

5,500mAh பேட்டரி வருவதால், 8.2 எம்எம் தடிமன் மற்றும் 190 கிராம் எடை வருகிறது. IP68 ரேட்டிங்குடன் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. மின்ட், பிங்க் மற்றும் பர்பிள் கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த மோட்டோரோலோ எட்ஜ் 60எஸ் போனின் விலை ரூ.18,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போது, இந்தியாவில் வெளியாக இருக்கும் மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா போனின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், இந்த போனின் குளோபல் வேரியண்ட்டில் கிடைத்த பீச்சர்களே இதிலும் கிடைக்க இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருப்பதை மோட்டோரோலா இந்திய நிறுவனம் உறுதி செய்துள்ளது.

மே.8 குறிச்சாச்சு.. இந்த சீரிஸ்-க்கு லிமிட் இல்ல.. எட்ஜ் 60எஸ் ரெடி!

மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Razr 60 Ultra Specifications): இதுவொரு ஃபிளிப் போன் மாடலாகும். ஆகவே, மெயின் டிஸ்பிளே மற்றும் அவுட்டர் டிஸ்பிளே கிடைக்கும். மெயின் டிஸ்பிளேவை பொறுத்தவரையில், 4,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட 7 இன்ச் (1224 x 2992 பிக்சல்கள்) பேனல் கிடைக்கிறது.

இந்த பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளேவில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட், டால்பி விஷன் மற்றும் 464 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 4 இன்ச் (1272 x 1080) பிஓஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவில் 417 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 165Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இந்த அவுட்டர் பேனலில் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் (Corning Gorilla Glass Ceramic) பாதுகாப்பு கிடைக்கிறது. இதுபோக ஒட்டுமொத்தமாக IP48 ரேட்டிங் டஸ்ட் & அண்டர் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. ஆகவே, பில்ட் குவாலிட்டி பட்டையை கிளப்பும்படி எதிர்பார்க்கலாம். இந்த மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா மாடலில் குவாட் பிக்சல் கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

மே.8 குறிச்சாச்சு.. இந்த சீரிஸ்-க்கு லிமிட் இல்ல.. எட்ஜ் 60எஸ் ரெடி!

அதேபோல குவாட் பிக்சல் (Quad Pixel), ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி, ஆல்-பிக்சல் போகஸ் (All Pixel Focus) மற்றும் பான்டோன் கலர் மற்றும் ஸ்கின் டோன்ஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 50 எம்பி அல்ட்ரா வைடு + மேக்ரோ கேமரா கிடைக்கிறது. இதற்கும் குவாட் பிக்சல் கிடைக்கிறது. பான்டோன் ஸ்கின், ஆக்சன் ஷாட், ஆட்டோ நைட்விஷன் போன்ற கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன.

இந்த மோட்டோரோலா ரேசர் 60 அல்ட்ரா போனில் 4700mAh பேட்டரி வருகிறது. அந்த பேட்டரிக்கு 68W டர்போபவர் சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் சப்போர்ட் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற ஆடியோ சப்போர்ட் உள்ளது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபியின் விலை ரூ.1,23,454ஆக இருக்கிறது. இது ஐரோப்பிய மார்கெட் விலையாகும். இந்தியாவில் வெளியாகும் போது மாறுதல்கள் இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Motorola Edge 60s With 50MP Camera to Launch on May 8 in China Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X